என் ரகசிய பெட்டகம் முழுதும்
நீ தந்த தித்திக்கும்
முத்தங்கள்.
Thursday, 30 May 2013
வெட்கவெளி
அந்த காட்டுவழியெங்கும்
காதலை பாடி வந்தேன்,
உன் பெயரை மூளிச்சென்றது
காற்று,
தலையாட்டி சிரித்தன
மரங்கள்
என் வெட்க வெளியெங்கும் மலர்ந்தன
பேரில்லா பூக்கள்!
நுணிப்புல்
ஓநாய்கள் இருப்பது தெரிந்தே
விலகிச்செல்லும் ஆடுகள்
சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன,
விழிப்புணர்வு பெற்றவை
மேய்ப்பானின் காலடி திரும்புகின்றன,
அவன் கூட்டிச்செல்லும் இடமெல்லாம்
பச்சைபசும் புல்வெளியே !
மற்ற ஆடுகளுக்கோ
மேய்ச்சல் நிலமில்லை!
அடையாளம்
அம்மாவுக்கு,
அப்பாவுக்கு
அக்காவுக்கு
நண்பர்களுக்கு
பள்ளிக்கு
இப்படி , என்னை அழைக்க
எத்தனை பெயர்கள் இருந்தாலென்ன,
நீயழைக்கும்
செல்ல "திருட்டு பயலாய்"
அடையாளம் கொள்கிறேன் நான்.
கீச் கீச்
இதயக்கூட்டில் நம்மை பற்றி
கனவுகள் அடைகாக்கும் சிறு பறவை நான்
குஞ்சு பொரித்த குட்டி குட்டி கவிதைகள்
"கீச்,கீச்,கீச்"!
விலகிப்போதலின் அடையாளம்
விலகிப்போன பாதையில்
கல்தடத்தை பதித்தே போயிருக்கிறாய்
எனக்காக!
நானோ ,உன் பாதச்சுவட்டை கண்டதும்
வழி மாற்றி நகர்கிறேன்!
சேமிப்பு
அவளின் முதல் புன்னகைக்கே
வாழ்க்கையை எழுதிக்கொடுத்த அப்பாவிடம்,
அடுத்தடுத்த புன்னகைக்கு கொடுக்க
கோடி முத்தங்கள்
சேமிப்பாக இருக்கிறது.
சித்திரை கணி
குன்றிமணி தங்கம்
வெற்றிலை பாக்கு
கொஞ்சம் பழவகைகளோடு இனிப்பு ,
திருவிளக்கின் ஒளியில்
கொன்றை பூ அலங்கரித்து வைத்து
குழலூதி நிற்க்கும் கண்ணனை
என் கண்பொத்தி
கூட்டிப்போய் கண்டால்
சித்திரைக்கணி ,
காப்பியோடு எழுப்பும்
உன் அழகு முகத்தில்
விழிக்கும் நாளெல்லாம்
எனக்கு
சித்திரத்தை கணி!
வீண் வம்பு
"யாரவது பாத்துடுவாங்க" என்று
விலகியே நடக்கும் உன்னோடு
மிக சேர்ந்திருப்பதாய்
குதித்து கும்மாளமிட்டு
என்னை வம்புக்கிழுக்கும்
ஜிமிக்கியிடம் சொல்லி வை
"கொன்னுப்புடுவேன் கொன்னு"!
முத்தச்சுவை
அழுது
அடம் பிடித்து
ஆர்ப்பாட்டம் செய்து பிடுங்கி
புன்னகையோடு நக்கி தின்ற
அந்த புளிப்பு மிட்டாயின்
அதே சுவைதான்
இப்போது நான் வாங்கும் முத்தங்களிலெல்லாம்,
நீயாக தருவதில்
இனிப்பதிகம்!
வெக்கை
ஹோ,என்ன வெயில்!
புழுக்கம் தாங்காமல்
உள்ளேயிருந்து எழுந்து
திண்ணையில் வந்தமர்ந்தேன் .
"மோர் கலக்கி தரட்டுமாடா "
அடுப்படியிலிருந்து கேட்டாள்
அம்மா!
வான வேடிக்கை
வாணவேடிக்கை பார்த்து
கைதட்டி சிரிக்கும் குழந்தையை
ரசித்தபடி ,வேடிக்கை பார்க்கிறது
வானம்.
பிறவிபயன்
"என்னோடு சண்டைபிடிப்பதற்காகவே
பிறந்தவள் நீ
உன்னை கட்டியணைப்பதற்க்காகவே
பிறந்தவன் நான் "
நீ கோபப்படும் நேரங்களில்
இப்படித்தான் தோன்றித்தொலைக்கிறது
நானென்ன செய்ய? போடி!
கொஞ்சநேரம்
"கொஞ்ச நேரத்துல வந்துர்ரேன்" என்கிறாயே,
"கொஞ்ச நேரம் பொறுத்துக்கம்மா"
பிரசவ அறைகளில் சொல்வார்களே,
அந்த கொஞ்ச நேரமாய் இருக்கிறது
உனக்காக காத்திருக்கும்
இக்கணங்கள்.
உனக்கு தெரியாது; போடா!
திருவிழா
எல்லா திருவிழா நாட்களிலும்
ஊருக்கு வருகிறாய் நீ,
நீ வரும் நாட்களிலெல்லாம் தான்
திருவிழா நடக்கிறது இங்கே!
முகம்
பூவை மொய்க்கும் பட்டாம்பூச்சிகள்
புண்ணை மொய்க்கும் ஈக்கள்
என்னை மொய்க்கும்
உன் நினைவுகளுக்கு
இரட்டை முகம்
இன்னொரு பெயர்
பெண்கள் எடுத்துக்கொள்ளும் உரிமை
அன்பு எனப்படும்
ஆண்களலால் எடுக்கப்படும் உரிமை
ஆதிக்கம் எனப்படும்.
Saturday, 25 May 2013
நடைபாதை
அந்த சாலையில்
கிழிந்துபோய்
குப்பையாய் கிடக்கிறது
ஒரு பயணச்சீட்டு!
அதே சாலையில்
மேலும் சில மனிதர்கள்!
பண்டமாற்று
புன்னகை கொடுத்து
புன்னகை பெற்றுக்கொள்ளுங்கள்!
பாரட்டு கொடுத்து
பாராட்டை பெற்றுக்கொள்வது
கேவலம்!
நிழல்
போக்குவரத்துமிக்க சிறு சாலையில்
மிக வேகமாய் ,
வளைத்து வளைத்து
தன் மிதிவண்டியில்
சாகசமாய் பயணிக்கிறான்
அந்த சிறுவன்.
திரும்பிபார்த்து முணங்கும்
பாதசாரிகளின் வசைகளிலிருந்து
லாவகமாய் தப்பிச்செல்கிறது,
அவன் நிழல்.
மந்திரச்சொல்
என் மந்திர சொல்லுக்கு
சில நேரம் சக்தியில்லை
மீண்டும் மீண்டும் முயற்சித்து
தோற்றுவிட்டேன்
இன்னும் ஒருமுறை
முயற்சித்து பார்க்கலாம்
"போனா மயிரு போச்சு, போ"!
ஹா ஹா வெற்றி வெற்றி வெற்றி!
பரிசல்
"முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி"
அதென்ன பிரமாதம்
"முல்லைப்பூ அமர தன் கூந்தலை கொடுத்திருக்கிறாள்
என் குட்டி லாரி"
***
"உலகில் உன்போல யாருமில்ல
ஒல்லி "
நான்தான் ,
நீ குளிக்கையில
உள்ள நுழையும் பல்லி"
***
"கொடியில பூத்திருக்கே அந்த பூ பேரு பூசணி "
" என் மடியில பூத்திருக்கியே ,
நீதான் எனக்கு புடிச்ச சனி"
***
உன்னை வாழ்த்திப்பாடும்
என் கவிதைகளுக்கான
பரிசல் பொருளை
"கொட்டோ கொட்டென்று"
கொட்டிதீர்க்கும் மழை
நீ! ;-)
வேடிக்கை விளையாட்டு
அழுது களைத்து
மயங்கி தெளிந்து
ஆறுதல்பட்டு ,
நிதானமாகி
சுதாரித்து எழுந்து நின்றபின்
காலை இடறிவிட்டு
மீண்டும் விழ வை
"ஆஹா, நல்ல சுகம்"
அருமை உன் பொழுதுபோக்கு.
:(
அதிகாலை மலர்ந்துவிட்ட புதிய பூ போல
உன் பழிவாங்கும் உணர்ச்சி
வார்த்தைகளாய் விரிகிறது, உன் சிரிப்பில் முட்கள்
"யானைக்கும் அடி சருக்கும்"
நீ என்னை தேர்ந்தெடுத்தாய்!
தவறை திருத்திக்கொண்டாய்;
தவறேயில்லை!
வெறுப்பின் பள்ளத்தாக்கிலிருந்து
அகங்காரத்தின் உச்சிக்கு செல்லும் பயணியே,
உன் யாத்திரை இனிதாகட்டும் !
நான் ,
கவிதைகளால்
என் உலகத்தை
அழகுபடுத்திக்கொள்பவன்!
நிர்வாணம் விரும்புவன் ,
முகமூடி இடுவதில்லை!
அந்த மழை எனக்கானதல்ல!
இந்த வெயில் உனக்கானதல்ல!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பூச்சாண்டி
"சாப்பிடலேன்னா, அம்மா பூச்சாண்டிகிட்ட பிடிச்சு குடுத்துருவேன்"!
நீ சாப்பிடும்
ஒவ்வொரு கவளம் சோற்றிர்க்கும்
ஒரு பூச்சாண்டி
தேவதையாகிறது!
"இன்னும் ,
ஒரே ஒரு வாய் சாப்பிடேன் அம்மூ"!
நிச்சயதார்த்தம்
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"
நிச்சயம் நடந்த இடம்
சொர்க்கமா ,என்று தெரியவில்லை;
நான் மோதிரம் அணிவித்தது
தேவதைக்குத்தான்!
இருள் கவியும் காலம்
கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
தாத்தா.
வெடித்துக்கிடக்கும் வயல் வெளியில்
சோகமாய் பாடிச்செல்கிறது
ராப்பாடி
கொட்டடியில்
'எதையோ' அசைப்போட்டுக்கொண்டிருந்தது
மெலிந்த காளைகள்.
தூரத்தில் மறைகிறான் சூரியன்!
பூவாலஜி
முதல் புன்னகையும்
முதல் காதலும்
நிகழ்ந்த கணத்தில்தான் பூத்திருக்கும்
முதல் பூ .
அல்லது ;
முதல் பூ பூத்த கணத்தில் நிகழ்ந்திருக்கலாம்
எல்லாம்!
********
பூ
ஆணிவேரின் புன்னகை .
********
கனிவாய் ஒரு பார்வை
எரித்துவிடும் ஒரு பார்வை
நிராகரித்து விலகிச்செல்லும்
இன்னொரு பார்வை
இருந்தும் ,மீண்டும்
உன் பார்வைக்காக
ஏங்கி தவமிருக்கும்
சூரிய காந்தி பூ நான்!
********
பெண்குழந்தை பெற்ற தாய்
பூச்செடி வளர்ப்பாள் .
குழந்தையில்லா 'தாய்'
பூ வளர்ப்பாள் .
******
மனைவி வீட்டோடு
மகன் காட்டோடு
பூவும்
உன்னோடு சேர்ந்து புதையும்!
*****
செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.
*****
செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.
*****
இந்த பிரபஞ்சமே ,ஒரு மலர்க்காடுதானே?
*****
வாழைப்பூ சேமித்து வைத்த
தேன் துளி போல,
உனக்கு தரமுடியாத முத்தங்கள்
என் பிள்ளைக்கு!
*****
உன் பின்னால் வரும் ,என்னை
வேடிக்கை பார்க்கும் கனகாம்பரம் ,தோழிகள் .
அந்த ஒற்றை ரோஜா, ராஜகுமாரி .
நீ மாட மாளிகை!
*******
ஆண் ,தன் காதலை
நண்பனிடம் சொல்வான்.
பெண் ,தன் காதலை
பூவிடம் சொல்வாள்!
*****
மல்லிகைப்பூவின் மொழி தெரிந்தவன்
மனைவியை நேசிக்கிறவன்!
*******
பூக்களால் அடையாளம் கண்ட உடலை ,
சில நூறுகளில்
தீண்டி விடலாம் .
வாசனைகள் வெளியிடும் ஆன்மாவை
யாரால் ஸ்பரிசிக்க இயலும் ???
காதலற்ற நாசிகள்
நாசமாய் போகட்டும்!
*******
ஆதி முத்தத்தை
பார்த்த வெட்கத்திலோ,
இன்னும் சிவந்திருக்கின்றன
வேலி செம்பருத்திகள் .
*****
நீ பறித்த அத்தனை செடிகளும்
விதவையாகின,
நீ சூடிய அத்தனை பூக்களும்
சொர்க்கமேகின!
******
ஆண்களுக்கு பெண்கள்;
கள்ளிப்பழம்.
பெண்களுக்கு ஆண்கள் ;
கள்ளிப்பூ
******
சிவலிங்கத்தை காக்கும்
நாகலிங்க பூ போல
நம் காதலையும்
பொத்தி பொத்தி காத்திடுவேன்
நீயும் இறையும்
எனக்கு ஒன்றுதான் .
******
நீ
மஞ்சள் தேய்த்து குளிக்கும்
என் செண்டுமல்லி!
*****
வண்ணமும் வடிவமும் வாசனையும்
பூவுக்கு பூ வேறுபடுவது போல,
காதலும் ,மனிதருள் மாறுபடும்!
******
மலர்தல் ஞானம்
வாசனை அன்பு
உதிர்தல் வீடுபேறு .
****
நட்டதும், வளர்த்ததும் நீயென்று
உரிமையெடுக்காதே,
"மலர்ந்தது "அது.
*******
பெயர் தெரியாத பூக்களுக்கு
பெண்ணின் பெயர் மிகப்பொருத்தம்,
பெயர் தெரியாத பெண்ணிற்க்கு
பூவின் பெயர் பொருந்துவதில்லை!
*****
பூ ,
அம்மனுக்கு
சுமங்கலி வரம் கொடுக்கும்!
*****-
புத்தனில் மலர்கிறது நீல பத்மம்,
நீல பத்மமாய் பிறக்கிறான்
புத்தன்!
******
மனதிற்குள்
காதல் இருக்கிறது தானே?
பூவின் கீழ் விதையிருப்பது போல!
காலமற்ற நிலை
நீ, என் வெப்பத்தில் குளிர்காய்கிறாய்.
நான், உன் வியர்வையில் குளிக்கிறேன் ,
தன்னிலையறியாது குழம்புகிறது
காலம்!
கடல்
உன் அன்பெனும் தொட்டியில் நீந்தும்
குட்டி மீன் நான் .
உன் அணைப்பை தவிர
வேறென்ன வேண்டும்
நான் வாழ்வதற்க்கு!
Friday, 24 May 2013
Friday, 17 May 2013
எனக்கு தெரியும் ,
வாழ்க்கை ஒரு பந்தையமல்ல;
நெடும்பயணம்.
தோளோடு தோள் நின்று
மகிழ்விக்கும் தோழன் போல ,
அன்பாய்
மேடு பள்ளங்களில்
பதறாமல் கூட வரும்
மனைவி போல
என் வழிப்பயணத்திற்க்கு
நம்பி எடுக்கிரேன்
என் புல்லட்டை!
*****
எனக்கு தெரியும்
இந்த பாதை எனக்கனது மட்டுமல்ல,
உங்களுக்கானது ,
அவருக்கானது,
அவளுக்கானது,
தன் பாதையை
தானே போட்டு செல்லும்
ஒரு பட்டாம் பூச்சிக்குமானதென்று
என் புல்லட்
யாருக்கும் தொல்லை தராத
எல்லோருடைய பாதையிலும் செல்லும் .
******'*
350cc யின் அபரிதமான ஆற்றல்
100cc க்கு வழி தந்து
"டாட்டா"காட்டும்.
அகம்பாவத்தில்
அரைகூவல்விட்டுச்செல்லும் அவர்களுக்கு
பெரும் பணிவு கொண்ட ,வாயுபுத்ரனை புரியாது
*****
மழை வருவது
மயிலுக்கும் தவளைக்கும் தெரிவது போல
தூரத்தில் நான் வருவதும்
என் அன்பர்களுக்கு தெரியும் .
******
புல்லட்டை
தொடக்குவதும் இயக்குவதும்
ஒரு கலை,
ஒரு தியனம் !
இயக்கத்தில் ,
புல்லட்டின் சப்தத்தில் கரைந்து
காணாமல் போய்
பயணம் மட்டுமே மீதமிருப்பது
"ஜென்"!
*******
இளையராஜாவை பாடியபடி
குளிர்காற்று முத்தமிட
பிற வாகனங்களற்ற புறவழியில்
பெளர்ணமி நிலா வெளிச்சத்தில்
பைக்கில் பயணத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
புல்லட்டில் பயணிப்பவர்கள்
வரம் பெற்றவர்கள்!
"டுப் , டுப் , டுப், டுப்"!