Saturday 17 October 2015

ஆட்டுக்குட்டி

மழையும் வெயிலும்
தங்க மீனும் money plantம்
வானவில்லும் விண்மீனும்
பூக்களும் குருவிகளுமாய்
பெருமகிழ்சி கொண்டதாய் இருக்கிறது
அவளின் உலகம்
கைபிடித்து வாஞ்சையோடு
என்னையும் சேர்க்கிறாள்
அன்புகொண்டு என்னை
ஒரு ஆட்டுகுட்டியாய் உருமாற்றம் செய்கிறாள்

ஆட்டுக்குட்டியின் செல்ல பெயர்
"எருமெ"யாம்

காதலென்பது யாதெனில்

டீ I love you

நா ஒண்ணும் I love you இல்ல

இல்லாட்டி போ
இந்த மூஞ்சி love  பண்ணலேன்னு
யார் அழுதா,
நானே love பண்ணிக்கிறேன்
உன் love யாருக்கு வேணும்
போடி போடி

உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………

ஐய்யய்யோ என்ன கொல்றானே
யாராவது காப்பாத்துங்க

முத்தமாற்று முறை

சிறு ஊடலுக்குப்பின்
ஒரு முயல் குட்டியை போல
முக ஜாடை வைத்துக்கொண்டு
சமதானம் பேச வருகிறாள்

போடி போடி

டேய் ஒரே ஒரு முத்தம் குடுடா என்று கெஞ்சுகிறாள்,
கொஞ்சுகிறாள் ராட்சசி

கேட்ட உடனே தர என் முத்தமென்ன
அவ்ளோ எளப்பமா?

சரி ,அப்பொ என்னோட பத்து முத்தம் தர்ரேன்
அதுக்கு பதில,
ஊருல கெடைக்காத பொக்கிஷம்
உன்னோட ஒரு முத்தம் குடு
சரியா?

உடன்படிக்கை ஒப்பந்தமானது

வீடு மொத்தம் நிறைந்து கிடக்கிறது
எங்கள் முத்தங்கள்

மின்னல்

மின்வெட்டால்
விளக்கணைந்ததும்
மின்னல் போல
ஒரு முத்தம்

கொஞ்சம் காதல்

என்ன எவ்ளோ காதலிக்கிறே?

கொஞ்சமா
-
-
-
-
கொஞ்சம் கொஞ்சமா!

காதல் எறும்பு

எதிர் கடக்கையிலெல்லாம்
முத்தமிட்டுக்கொள்ளும்
இரு எறும்புகள் நாம்
காதல் பகிர்ந்துண்கிறோம்.

மின்வெட்டு

ஐய்யய்யோ, கரண்ட் போச்சே
இப்பென்ன செய்ரது?
-
-
-
.…………ஹ ஹ ஹா
-
-
"போடா, எருமே.