Saturday 30 November 2013

ப்போடா, நீயும் உன் காதலும்





உன்னை கட்டிக்கொண்டு
சிரித்துப்பேசி மகிழ்ந்திருப்பது
இனிக்கிறது தான்
இருந்தாலும்
நீயில்லாத நேரங்களில் 
பாழாய்போன
உன் காதலை கட்டிக்கொண்டு அழுவதுதான் எனக்கு 
பெரும்பாடாய் இருக்கிறது.

வியாதி

காதல் என்பது
ஏதேனும்
சந்தேக வியாதியா என்ன?
அவனில்லாத என்னை
"நான்தானா"வென்று
நானே சந்தேகித்து தொலைப்பதை என்ன சொல்ல?

காரணம்

சொல்லி பயனிலா சொல்லை
சொல்லாதே
என்கிறான் வள்ளுவன் 

அவளி(னி)டம்
சொல்ல தவறிவிட்ட சொற்களை
கவிதையாக்குவதால்
ஒரு நிம்மதி.

சாம்பல்

நான்கைந்து துளிகள் விழ
புகையாய் மாறி
பறக்க எத்தனித்தது     பின்
அடங்கி
கரைந்து போனது
சாம்பல்.

*ஒரு கவிதை*



எல்லா சொற்களும் தீர்ந்த பின்னும்
உள்ளே ,
சிரித்தபடி நிற்கிறாய் நீ 
அதை ,விவரிக்க கைய்யாண்ட
சொற்களெல்லாம்
தோற்றுப்போய்
தலை குனிந்து
வரிசையாய் நிற்பது
ஒரு கவிதை.

பூக்கள் மட்டுமல்ல
மொட்டும் அழகுதான்
உனக்கே சமர்ப்பணம்!

புன்னகை

எல்லா மரணத்திற்க்கு பின்னாலும்

ஒரு புன்னகை ஒளிந்திருக்கிறது.

இப்படியாக

*கொள்கை*

அய்யோ! உயிர்கொலை கொடூரம் .

முட்டையை உடைப்பது பாதிப்பதில்லை

இப்படியாக வாழ்கிறேன்

கீச்சு

"கீச்சு"


அவன் அருகிலில்லாத இந்த அதிகாலையில்
ஏன் இந்த புழுதீனி குருவிகள்
இப்படி கூச்சலிடுகின்றன?
நேற்று இப்படியில்லையே!

கருப்பைக்குள் சுருண்டு கிடக்கும் கருவாய்
உன்னோடே அமிழ்ந்து கிடக்கிறேன்
இந்த உலகெலாம் நீயே!