Wednesday 31 October 2012

*நான் தமிழன்*

பெருமானுக்கு,
பெரிய கோவில் கட்டினான்
ராஜராஜன்.
காவிரிக்கு
கல்லணை கட்டினான்
கரிகாலன்.
உலகமே வியக்க
நாமும் கட்டினோம்
ஒரு கோவில்
குஷ்புவுக்கு!

***
அங்கே ,
கொத்து கொத்தாய்
செத்து விழுந்தது
மக்கள் கூட்டம்.
இங்கோ,
தியேட்டர் முழுக்க
விசில் பறக்கும்
சினிமா நாட்டம்!

*** 

திருக்குறள்,
திருவாசகம்,
பத்துப்பாட்டு;
மானாட,மயிலாட
குத்துப்பாட்டு!

***
அச்சம்,மடம்,
நாணம் பயிர்ப்பு;
"அவுத்திப்போட்டு ஆடுவதுக்கு"
நம்மில்
யார் பொறுப்பு?

*** கில்லி,கபடி,கிளிக்கரம்;
நாம, வெளிநாட்டு வெளயாட்டுல
நேரத்த கழிக்கிறோம்!

***
எலந்தப்பழம் ,பனியாரம், அச்சு முறுக்கு;
வித்து ,காசு பண்ண
இன்னும் என்ன மிச்சமிருக்கு?

***

அன்றோ,
பார் போற்றும்
நம் நாடு;
இன்றோ ,
BARஐ மட்டும் போற்றுது
தமிழ்நாடு!

***
பத்தாயிரம் வருசத்து
பண்பாடெல்லாம்
கட்டிகாக்க
தலைவன் எங்கே?  
அம்மாவின்
துணியவுத்து
ஏலம் போட,
அண்ணன் தம்பிக்குள்ள
அடிதடி இங்கே!


Monday 29 October 2012

*போர் நிறுத்தம்*

உன் நாட்டுக்கும்,
என் நாட்டுக்குமான
எல்லையில்
காவலை பலப்படுத்தியிருப்பாய்,
தலையணையாகவோ,
மெளனமாகவோ!
சமாதான
தூதனுப்புவேன்,
விரல்களையோ
முத்தத்தையோ!


*பெரும் சாட்சி*

மூலவருக்கு தெரியும்!
கரிகாலனின் முகமும் ,
மாணிக்கவாசகனின் குரலும்,
என் நெற்றியில்
திருநீறு கீறிய
அந்த பூ விரலும்,
இந்த மெளனத்தின் புலம்பலும்,
கனவுகளின் கண்ணீரும்,
கண்ணீரில் கலந்திருக்கும்
காதலும்!


Sunday 28 October 2012

தர்சநம் புண்யம்;
ஸ்பர்சநம் பாப நாசனம்!
சிவனடியார்க்கு
வில்வ இலை!
எனக்கு ,
நீ!

Friday 26 October 2012


சந்தி ,சாரியை,
எதுகை,
மோனை,
வெண்பா,
ஆசிரியப்பா………………
எனக்கு
தெரியாதுப்பா!
தெரிஞ்சதெல்லாம்,
அவ, என்ன பாத்து
light ஆ……………
சிரிப்பா!

Thursday 25 October 2012

ஏதோ! பேருக்குத்தான்,

எழுதிக்கொண்டிருந்தேன்,
நீ
வாசிப்பது தெரிந்ததும்,

பேரிலக்கியம் படைத்த சந்தோஷம்!

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை!

நாட்குறிப்பில் நிறைந்திருக்கும்,
நான்
மொழிபெயர்த்த
காதல் கவிதைகள்!

உன் காதலை,
மொழிபெயர்த்த ........

என் கவிதைகள்!

facebook

அடம்பிடித்து,
சண்டையிட்டு,
ஆர்ப்பாட்டம் செய்து,
அழுது,
அம்மாவை
திரும்பி பார்க்க வைத்த
குழந்தையொன்று,
வளர்ந்தபின்
"tag" போட
தொடங்கியது!
:)

Wednesday 24 October 2012

இந்த காற்றுக்கெல்லாம்
உதடு பொருத்தி
அனுப்பி வைத்தவள்
நீயா?

Tuesday 23 October 2012

நெரிசல் பேருந்தில்
இருக்கை கிடைக்காதது,
என் அதிர்ஷ்டம்!
நெஞ்சம் நிறைந்து
மயங்கி சரிகிறேன்,
இதயம் முழுதும் ,
உன்
செண்பகப்பூ வாசனை!


Sunday 21 October 2012

கூடல் இரவுகளின் காலையில்,
அசதியில் உறங்கி கிடக்கும் உனக்கு,
அறைகுறையாய்
ஒரு காபி கலந்து தருவேன்,
சோம்பலாய் புன்னகைத்து,
ஆச்ச்ர்யத்தில் மலர்வாயே,
அந்த கவிதைக்கு பெயர் என்ன?


Thursday 18 October 2012


நான் , ஒரு பூ ;
என் வண்ணத்து பூச்சிக்கான
"பூ"!

*பாவ மன்னிப்பு*

தலையசைத்து,
புன்னைகைத்து,
"ஓ, அப்பிடியா!" என்று சொல்லி
சிரிப்பாள்......
என்னை பற்றியறிந்த,
என் வீட்டு தேவதை!
என்
எல்லா திருட்டுத்தனங்களும் , 
குழந்தையாகும்!

ஒரு பூ ; எப்போதுமே,
ஏதோ ஒரு
வண்ணத்து பூச்சிக்கான,
ஒரு
"பூ"!
வேறென்ன?


கண்டுகிட்டியவை!







என்
கவிதைகளுக்கு கிடைத்த
மிகப்பெரும் ரசிகை; நீ!
உன்
வெட்கத்துக்கு கிடைத்த
மிகப்பெரும்
குறும்பன்;
நான்!
ரசிகைக்கும்,
குறும்பனுக்கும் கிடைத்த,
மிகப்பெரும் ,தனியுலகம் .........
இந்த காதல்!


Wednesday 17 October 2012

item song dancer


அவள்
கழற்றி எறிந்திருக்கா விட்டால்,
நானும் ,
நீயும்,
கிழித்து வீசியிருப்போம்!

வேண்டுதல்



கறிவேப்பிலை………,
கொத்தமல்லி…………,
காபிப்பொடி…………,
பருப்பு…………,
இஞ்சி………,
லிஸ்டில் இல்லாத,
நான்கு ஜோடி
கண்ணாடி வளையலுக்கு  ,
கண்விரித்து
கட்டிக்கொள்வாளே, ஒருத்தி! 
அவள் போதும், எனக்கு!


பழுத்த இலை

கைத்தடியை
தொலைத்து , புலம்பிய
தாத்தா,
பாட்டி "போன "பின்னே,
ஏதும் பேசுவதில்லை!
குழந்தையில்லா,
தம்பதியின் உடலுறவாய் ,
சலித்து விட்ட
வாழ்க்கையில்,
பெரிதாய் எதை
எதிர்பார்க்க?
அமைதியாய்
ஒரு மரணம்!

Tuesday 16 October 2012

நீ
கொஞ்சும்போது,
தொட்டில் ,
குழந்தையாகும்!

நான் ஒரு "பொய்யன்"!
என் , எல்லா பொய்களும்
தீர்ந்த பின், 
"இன்னும் கொஞ்சம்"
சேர்ந்து படுப்பேன்!


மலரானவள்!

சித்திரை மாதத்து
பாதைகளில்
கொன்றை மலர்
பூத்து குலுங்கும்!
என் கழுத்தை
கட்டி சிணுங்கும்
உன்னை
நினைத்துக்கொள்வேன்!


Monday 15 October 2012

பூமகள் ஊர்வலம்

பாம்பை கண்ட
சிறுவர் கூட்டமாய்,
கூச்சலும் ,பயமும் , குதூகலமும்
பொங்கி பெருக,
"அதோ, தூரத்தில்
அவள் வருகிறாள்!"


torture

"சனியனே,வலிக்குதுடா",,
அழுகையும் ,
கோபமும் கலந்து
நீ சொல்லும்
"போடா பன்னி" க்காகவே,
இன்னுமொரு முறை
"கிள்ளி வைப்பேன்"!


மியாவ்!

அடுக்களையில்
பாத்திரம் உருட்டி
ரகளை செய்யும்,
"குடிச்சிருக்கியா"? கேட்டு
கோபம் கொண்ட
பூனை குட்டி!

***'

ஊடல் நாட்களில்
படுக்கை ஓரத்தில்
சுருண்டு படுக்கும் ........
அழுது களைத்த
பூனைக்குட்டி!
வாரியணைக்க ;
பிரண்டி வைக்கும்!

*****

லேசாய் கடித்து,
சண்டைக்கிழுக்கும்........
தேகம் குறுக்கி ,
தயாராகும் …………
பால் வாசனைக்கு
கால் சுற்றும்!

"உலக அழகி ,
நீதானென்று ,
கவிதையொன்றை தட்டிவிட
கோபம் மறந்து
கட்டிகொள்ளும்
"கொஞ்சம்"
பெரிதாய் வளர்ந்த
பூனைக்குட்டி!


முயற்ச்சி






அலாரத்தை
off செய்து விட்டு,
போர்வையை
இழுத்து மூடி,
உன்னை
இறுக்கி
அணைத்து கிடக்கும்
பத்து நிமிடங்கள் ;
நான்
"சொர்க்கத்தில் தொங்கி கொண்டிருப்பது"
அல்லது
"நரகத்தை தள்ளி போடுவது"!


*அடைகாத்தல்*

அணைத்துறங்கயில் ,
உன்
மார்புசூட்டின்
கதகதப்பில்
கவலை ஓடு
உடைத்து விரியும்
என் "கோழி முட்டை கவிதைகள்"!


Thursday 11 October 2012

அன்பும் ,காதலும்!

மார்பு காம்புகளில்
வேப்பெண்ணை  தடவும்
அக்கரை தாய்,
நீ! 
கவிதை விரல் சூப்ப
கற்றுக்கொண்ட
கெட்டிக்கார குழந்தை
நான்!

" பிரிவின் நாட்களும் இனிமையே"

Wednesday 10 October 2012

*கர்ம வினை*



இவன் ,
துஷ்யந்தன்!
"சகுந்தளை மறப்பாளாக"
சாபம் பெற்ற,
துஷ்யந்தன்!


Tuesday 9 October 2012

நீயும், நானும்
கைகோர்த்துலாவிய,
பூங்கா!
நீ
கை உதறி
சென்ற பின்,
குப்பைமேடு!


*பித்து*

கள்ளுப்பானைக்குள்
செத்து மிதக்கும்
ஒரு கருவண்டு.
எடுத்து
வெளியே, தட்டிவிட்டு
குடிக்க தொடங்குகிறேன்;
காதலை!

Monday 8 October 2012

director of photography (phd)

"அங்க நில்லு"
"இங்க நில்லு"
"அப்டி பாரு"
"இப்டி பாரு"
"அப்டி சிரி"
"இப்டி சிரி"

"போடா,
உனக்கு வேற வேலயில்ல"!

எப்பிடியெல்லாமோ ரசிக்கிறான் திருடன்!
எனக்கு தெரியாதா???


சித்தார்த்தன்

 

கரையோர
கூழாங்கற்களை ,
ரசித்துக்கொண்டு
நிற்க்கிறாய்! 
உன்
வெற்று கற்கள்
அங்கேயே கிடக்கும் ,
ஆழ் அமைதி
நீரோடை நான்;
நகர்ந்து கொண்டிருப்பேன்!

good morning!

அதிகாலை குளிருக்கு,
இளம்சூடாய்
ஒரு காபி,
ஆஹா!

"அடியேய், காபி இன்னும் கொஞ்சம் கொண்டா" கூட

அந்த முத்தமும்!


அருள் (தலையெழுத்து)

கடவுளேஏஏஏஏ,

சோகம்னா, பொரும் சோகம்!
மகிழ்ச்சின்னா பெருமகிழ்ச்சி, 
காதல்னா பெரும்காதல்,
காமம்னா,கடும்காமம்!
கவலைனா பெருங்கவலை!
நிறைவுன்னா முழு நிறைவு,
ஆசைனா பேராசை,
துறவுன்னா முழு துறவு!
ஒண்ணு அந்த கோடி,
இல்லன்னா
இந்த கோடிக்கு
ஓடுரேனே,
நடுவால போர
பாதை வேண்டும்,
அருள்வாயாக!

முருகன்:"பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா!.……………இந்த பந்தம்………கிந்தம்????   "கவித எளுதுரவனுக்கெல்லாம், பொட்ரோமேக்ஸ் லைட் குடுக்கற்தில்லெ!!!!!

Saturday 6 October 2012

:-* smileys

அடுக்களையில்
பத்திரம் தட்டிவிடும்
பூனை,
தட்டுமுட்டு சாமானுக்குள்
எதுவோ உருட்டும்
எலி, 
உன்
"சிரிப்பான்"கள்
செய்யும்
"லூட்டி"க்கு மட்டும்
அளவேயில்லை!

அவள்

உன்னைபற்றி
காற்று சொன்னது,
"முள்ளிலாத பூச்செடி"
அவளை
கடந்த பின் தான்
"நான்  , பூங்காற்று"!
வலிந்து
திணிப்பாயாமே,???
அன்பின் வாசனையை!
குழந்தைக்கு
கூள் ஊட்டும்
தாய் போல! 

"நாங்கள் இருவரும்
தோழிகள்,
இருவருக்கும்
ஒரே குணம்,
" மழை சொன்னது!
முழுவதும் நனைத்து விடும்
கவிதை சாரலாம்
நீ!

நிலவுக்கு
போட்டியா நீ???
அமாவாசை
நாட்களில்,
அரவணைத்து,
அறிவுரை கூறும்
"குட்டி மின்மினி"! 

ஊதாரி பெண்ணாம் நீ,
ஊரே சொல்லுது!
"எடுத்து வச்சி
என்னாக போகுது"வென்று,
ஊரெல்லாம்
அள்ளி தெளிக்கிராயாம்,
உன் விலைமதிப்பற்ற
புன்னகையை!

உன்னோடு பழகிய
எல்லாரும் சொன்னார்கள்
உன்னை பற்றி!

எனக்கோ
புது பழக்கம்!
பெரிதாய்
ஒன்றும் தெரியாது!

உன்
கைகளை பற்றி, மட்டும்
சொல்லி விடுகிறேன்

நான்
ஊஞ்சலாட
தேர்ந்தெடுத்த

ஆலம் விழுது!!!!


அந்த
குல்மொஹர்   மரத்தின்
கடைசி இலையும் உதிர்ந்த ,பின் தான்
நகருமோ
இந்த
இலையுதிர் காலம்?

Friday 5 October 2012

friend அ போல யாரு மச்சான்!!!

*"மூடு, எல்லாம் எங்களுக்கும் தெரியும்

"டேய்,
யாரா இருந்தா என்ன???
வாடா பாக்கலாம் -
அர்ஜுன்

***
குரலை உயர்த்தி
சண்டைக்கிழுப்பான்
-பிரசோப்-

**** 
கம்யூனிசம்
ஒரு பொண்ணு மாரிடா,

really i am i love u (her)"
சொல்லி
புரோட்டா ,
மிச்சருக்கு
உயிர் விடுவான் -
சதீஷ்-

***
நண்பருக்காய்
தியாகம் செய்து,
சின்ன விஷயத்தில்
கோபம் கொண்டு
தலை கீழாய்
நிற்ப்பான்
-சரத்-

***
பீடி வாங்க வைத்திருக்கும்
3 ரூபாயில்,
gold filter வாங்கி
முதல் பப் தருவான்
-சசி-

*** 
"டேய், பாபு
நேத்து என்னாச்சு தெரியுமா?…………
எப்போதும் போல்
பொய் பேசி
மாட்டி கொள்வான் -பிரபாகரன்-

*** 
செட்டாகாத
பிகர் பற்றி பேசி,
சரக்கடிக்க தயாராவான்
(பில்டப் மன்னன்) -
பார்த்திபன்-

****
டேய் ,
அப்டியில்லடா மயிரே,
இந்திய பொருளாதாரம்……………

வாயில் போட்ட முறுக்கை
பிடிங்கி தின்று ரசிப்பான்
-சதீஸ் குமார் (கவுண்டர்)
***
***
எல்லாருக்கும்
செலவுசெய்து
கடைசி தீண்பண்டம்
எடுத்து வைத்து
சிரிப்பான் -ராமு-
**** 
"நாம
பழைய மிலிட்டரி என்பான்,
மீசையில்
மண் ஒட்டாத - ப்ரீஜு-
***
என்னை பற்றி
பெரிதாய் சொல்ல
ஏதுமில்லை!

BE second year!

என்னவள்,
கட்டடகலை
படிக்கிறாள்,
முத்தங்களுக்கு
design போடும்
engineer காதலி!

வாகன புழுதி
முகத்தில் அப்ப,
மூச்சு திணறி
துடிக்கும், 
சாலையோர
பூச்செடியொன்று,
நீ வாசித்து
வாழ்த்தாத
என் கவிதைகள்!

"ஏதோ"!

அடிபட்டு,
கை முறிந்து,
கால் திருகி,
தலை பிளந்து
என் மடிகிடந்து துடித்த
ராதண்ணன்,
எதோ,
சொல்ல சொல்ல வாய் திறந்து,
ஊற்றிய
ஒரு கவளம் நீரில்
அடங்கிப்போனார்!

என்னை பிடிக்கவில்லையாம்,
என் கவிதைகள்
மட்டும் தான்
பிடிக்குதாம்,
அவளுக்கு!
அவள் புன்னகை,.........
அந்த கன்னக்குழி,.......
அவள் கோபம்,.........
அந்த வெட்கம் .......,
அந்த சிணுங்கல், ........
ஒட்டு மொத்தமாய்
அவளையே
நேசித்து தொலைத்தது
என் தவறு!


Thursday 4 October 2012

துணை

சாலை நடுவே
சலிப்புற்றிருக்கும்
பகல் நேர
விளக்கு கம்பம் .  
எங்கிருந்தோ பறந்தமர்ந்த
புறாவொன்று,
எச்சமிட்டு
இளைப்பாறி
பறந்து போகும்! 
நீயும் நானும்!


*நியாயங்கள்*


"இதயமற்றவன்"!

"பிடுங்கி எறிந்தவள்"!

பெண்ணே,
இந்த மெளனம்,
காவல் அரணா,
சிறைச்சாலையா?


Tuesday 2 October 2012

அவளுக்கு,
நிலா பிடிக்கும்,
விண்மீன் பிடிக்கும்,
பூக்கள் பிடிக்கும்,
கனா பிடிக்கும்,
கவிதை பிடிக்கும்,
மழை பிடிக்கும்,
பனித்துளி பிடிக்கும்…………………
நானோ, ..................
.......
வெயில் கால
புழுதிக்காற்று!


அவன்,அவள்

பெண்ணே,
என் வானம்
மிக சிறியது,
உன்
சிறகுகளை விட!


Monday 1 October 2012

*பிரிவு*


தாயை
இறுக்க பிடித்து
அழுத்தொடங்கும்
ஒரு குழந்தை,
கவிதையை
அணைத்து கொள்கிறேன்
நான்!
ஊசியோடு நெருங்குவாள்
ஒரு செவிலி;
நீ
"ஊருக்கு செல்லும்"
நாட்களை போல!