Saturday, 2 January 2016

நன்றி காதலே


அய்யே, கண்ணாடி வளையலா.……
போடா , அதெல்லாம் old fashion.

ஹைய்யோடா……இந்த கொலுசெல்லாம் போட்டா,
"ஜல்,ஜல்ணு சந்திரமுகி மாதிரியிருப்பேன் பரவால்லியா?

சாரியெல்லாம் Bore, சுத்து சுத்துனு சுத்தி ………நடக்கவும் முடியாது,
ரொம்ப uncomfortableளாயிருக்கும்

சினிமாவா? , நான் வரல……ஒரே இருட்டா ,அடைச்சு வச்சபோல இருக்கும்

பாஸ் , என்னாதிது 40 லயே போரீங்க?
இப்பிடி போனா நாளைக்கு காலைல ஆயிரும், ஒரு 100,140 ல போங்க
(நானென்ன bmw வா வச்சிருக்கேன்,awwww)

("அண்ணா, ரெண்டு சப்பாத்தி , குருமா VEGல கொடுங்க! உனக்கு சொல்லிக்கோ")
அண்ணா,beef biriyaani, omlet, அப்புறம் ஒரு  chilly

(அன்பே………என்னவளே…etc.)
ஏட்டா, போதும் ஏட்டா விட்டிடுங்க please
முடியலே……
கடவுளேய்………மொக்க போட தெடங்கீட்டானே காப்பாத்தூ……

(அப்பறம்………சொல்லு!
ஹலோ……ஹலோ…ஹலோஓஓஒ)
டேய் , மணி10 ஆச்சு ! தூக்கம் வருது gnt ,bye , ummah.டொக்.

பாக்க வரும்போது சும்மா வா.
எப்ப பாத்தாலும்
ரோஸ்,மல்லி, செம்பருத்தின்னு
தூக்கீட்டு வராதெ

உலகின் மிக சிறந்த காதலி கிடைத்திருக்கிறாள் எனக்கு
நன்றி காதலே…மிக்க நன்றி.

குறையொன்றுமில்லை காதலே

குன்றிமணியும்
மின்மினி பூச்சிகளும்
பெரும் அதிசயமாய் இருக்கும்
உலகத்தில் வாழ்கிறோம்
நீ உன் பிரார்த்தனைகளையெல்லாம் எனக்கானதாக்கினாய்
நான் என் முத்தங்களையெல்லாம் உனக்கானதாக்கினேன்
அந்தியில் கைகோர்த்து நடக்கலாம்
அலைகள் காலுரச கடற்கரையில் விளையாடலாம்
பிடித்த பாடலை முணுமுணுக்கலாம்
"போடா, போடி" விளித்து பொய் சண்டையிடலாம்
ஒருதுளி தேன் குடிக்கலாம்
ஒரு கவளம் சோற்றில் பசியாறலாம்
மழையில் நனையலாம்
மழைச்சத்தம் கேட்கலாம்
பெளர்ணமி இரவில் நிலா பார்த்து
கட்டிப்பிடிக்கலாம்
கன்னம் கிள்ளலாம்
கவிதை சொல்லலாம்
சண்டையிட்டு பேசாதிருக்கலாம்
சமதானமாகி விடிய விடிய பேசலாம்
தோள் சாயலாம்
மடியில் கிடக்கலாம்
புல்லட்டில் சிறு பயணம் போகலாம்
கலவிகொள்ளும் இணை தும்பிகள் போல
உறக்கத்திலிருக்கும் சிறு குழந்தை போல
தூரத்தில் வெள்ளைக்கோடாய் தெரியும் ஒரு மலையருவியை போல

இங்கே நாமும்  நம் காதலில்
மகிழ்ச்சியாய் வாழலாம் கோணவாச்சீ
வேறென்ன வேண்டும்!

ஆனந்தியெனும் குட்டிதேவதை

வஞ்சனையும்
வன்மங்களும்
பொய்களும்
பிளாஸ்டிக் குப்பைகளும்
துரித உணவுகளும்
போலி புகழ்தல்களும்
வாகன இரைச்சல்களும்
நியான் வெளிச்சங்களும்
வசவு சொற்களும்
நிறைந்த  இந்த பெரு நகரத்தின்
சுழலில் சிக்கி பிதுங்கி
திரும்ப வீடு வருகையில்

வாசல் வந்து சினேகமாய் புன்னகைத்து
வரவேற்பாயே, அந்த ஒற்றை புன்னகை
போதுமாய் இருக்கிறது
நான் இன்னும் உயிரோடிருக்க

ஈஈஈஈஈஈஈஈ

காதலெனும் பூதம்
என்னிடம் தூதனுப்பிய
ராட்சசி

நகத்தால் புள்ளிவைத்து
பற்களால் கோலமிடும்
கொடுமைக்காரி

யாரு?

வேறு யார்? நீதான்.

டாஆஆஆஆஆஆஆஆய்!

காதலிருக்க பயமேன்

ஒரு பூந்தோட்டத்தில்
வழி தவறவிட்ட வண்ணத்துப்பூச்சியாய்
குதூகலமாய்
உன்னில் அலைகிறேன்

எனக்கென்ன பயம்
காதல் இருக்கையில்

கார்த்திகை மாத இரவில்
குளிர்ந்து ஓடும்
ஒரு ஆற்றின் அடியாழத்தில் 
அருகருகே ஒட்டியுரசி கிடக்கும்
இரு கூழங்கற்களாக
போர்வைக்குள் கிடக்கிறோம்
பேச்சற்று
அசைவற்று
ஒருவரையொருவர் பார்த்தபடி

வெளியே இருளும் குளிரும் நிறைந்து வழிய
சீரான மூச்சு கவிதை சொல்ல
நம்மை தழுவி கிடக்கிறது
காதல்