Thursday 29 September 2011

சாலையோரம் கிடக்கும், குடிகாரன் நான்;
காதல் என் கோப்பை,
அவள் என் மது;
இன்னும் ஊற்றுவேன்.........
இன்னும் குடிப்பேன்!

Tuesday 27 September 2011

காதல் ஒரு காட்டாறு ,
இழுத்து சென்றாலும் சரி, மூழ்கடித்தாலும் சரி,
நான் குதிப்பேன்!


Monday 19 September 2011

*பயணம் சேரும் இடம் *

பிச்சி பூ சூடிய 
ஈர கூந்தலை முகர்ந்து
உன் பின் கழுத்தில் முத்தமிட்ட,
நாள் போல இருக்கட்டும் ……… என் கடைசி நாள்!

அந்திமாலை நேரம்,
அற்றின் கரை ஓரம்,
அழகான புல்வெளியில்,குளிர்காற்றில்,
ஒரு முட்டி கள்ளும்,
கொஞ்சம் , உன் நினைவுகளும்.....
இதோ வந்துவிட்டது பார்………
கவிதை வாந்தி!


Friday 16 September 2011

*விஸ்வரூபம்*

தரை தொட்டால்,உன் எச்சில்! கன்னத்தில் பட்டால் , முத்தம்; பேனாவில் விழுந்தால் ...கவிதை;

கண்காட்சிக்கு வந்திருந்தாள்.
எனக்கோ,
அது ,கண்கொள்ளா காட்சி!

எனக்கு அறிவு வந்த நாளிலிருந்து,
உன்னை காதலிக்க தொடங்கி விட்டேன்,
கல்யாணமானால் பெண்கள் ,வேறு
வீட்டுக்கு சென்று விடுவார்கள் என
தெரிந்து கொண்டதுதான் .......
என் முதல் அறிவு!

Wednesday 14 September 2011

#பொம்மல சேச்சியின் தற்க்கொலை#

என் முகம் வாடின போதெல்லாம்,
தலை கோதி,
நெற்றி முத்தமிட்டு,
மிட்டாய் தருவாயே, அக்கா;
இன்றும் நான் வாடித்தான் இருக்கிறேன்;
நீ எங்கே?

பத்ர காளி

விஜய் பிடிக்குமா,
அஜித் பிடிக்குமா
என கேட்டதற்க்கு
த்ரிஷா பிடிக்குமென்று  சொல்லி விட்டேன்; பத்ர காளி! த்ரிஷா அவள் தோழியாக மட்டும்     இருந்திருந்தால் , சோற்றில் விஷம் வைத்திருப்பாள்! 

நான் காதலுக்கும்,
என் கண்ணீர் கடலுக்கும்,
என் கவிதைகள் உனக்கும்……… சமர்ப்பணம்!

சர்வாதிகாரி

மூன்றாம் உலகப்போர் வந்தால், அது
பெண்களால் தான்!
நான்  காந்தீய வழியில் ஒரு முத்தம் கேட்டால்,
அவள் சர்வாதிகாரியாய்
"ஒத விழும்" என்கிறாள்!


கில்லி பட்டு ரத்தம் வழியும்,
உன் நெற்றியில்
கை வைத்து      அழுதுகொண்டிருந்தாய்   ,
அத்தை அடித்ததால் நான் அழத்தொடங்கினேன் ,
உன் அழுகை நிறுத்தி,
என்னை ஆறுதல் படுத்த தொடங்கினாயே, தோழி;
நான் உன்னை விட்டு விட்டு, வேறு யாரையடி காதலிப்பது?

Tuesday 13 September 2011

உடைந்து சிதறிய,
கண்ணாடி துண்டுகளில்..... ஆயிரம் முகம்;
அதில் , எந்த ஒன்று.……
என்னுடையது?

"குடிச்சு,குடிச்சு, ஒடம்பெ கெடுத்துக்காதே" சொல்லி,
என் குட்டி தொப்பையில்
செல்ல குத்து விடும், அழகே, உன்னால் தான்; "பீருக்கு நான் அடிமை"!


Monday 12 September 2011

*ஒரு ரகசியம்*


அவள் தினமும் கடந்து செல்லும்

அந்த குல்மொஹார் மரத்தின் வேர்களில்தான்
ஒளித்து வைத்திருக்கிறேன்.....
என் காதலை!

ஒரு முத்தம் கிடைத்தால்,
பூக்கள் பூக்கும்,
மழை பொழியும்,
கவிதை வரும், பறக்கலாம்,
நிலா பேசும்,
விண்மீனாய் மாறமுடியும்...., இதெல்லாம்
பொய்யென நினைத்தால் சரித்திரம் படித்து பார்,
ஹிட்லருக்கு யாரும் முத்தம் கொடுக்கவில்லை!

பெண்களும்,காதலும் வெறும் தூசு தான் ; நம் கண்களிள் விழாதவரை!

உன் ஊருக்கு செல்லும்,
பேருந்துக்கெல்லாம் "டாட்டா" காட்டும் குழந்தை ஆகிவிட்டேன் ,நான்!

உன் ஊருக்கு செல்லும்,
பேருந்துக்கெல்லாம் "டாட்டா" காட்டும் குழந்தை ஆகிவிட்டேன் ,நான்!

Thursday 8 September 2011

*முதல் சந்திப்பில்*

  ஊதா பூக்கள் பூத்த,
கருநீல புடவை பெண்ணே,
இதோ பார், 
இங்கே ஒரு....,
வண்ணத்து பூச்சி!

Tuesday 6 September 2011

கனவு

உன் மெளனங்கள்……… இரவு ; 
என் கவிதைகள்.……… பகல் ; இரண்டும் சந்திக்க வழியே இல்லை!
விடிகாலையில் ஒரு கனா கண்டேன் ……,
உனக்கான ஒரு முத்தம்!
விடிகாலை கனா பலிக்குமாமே!

Sunday 4 September 2011

மிக சிறந்த ஓவியன்……உன் அப்பா,
மிக சிறந்த ரசிகன……நான் ,
மிக சிறந்த கலை ………காதல்!

என்னை பற்றிய,
அடையாளங்களில் ஒன்று,
உன் கன்னக்குழியில் விழுந்து,
கால் உடைந்தவன்!

*முரண்*

என்னோடு பேச வெட்க்கப்படும் அவளுக்கு.…………
வாயாடி கொலுசு!

Friday 2 September 2011

*"பறக்கும்" தேவதை*

சிறகுகளின் இடத்தை
scooty கைப்பற்றியது!