Saturday 27 November 2010

நீ கொஞ்சும்போதுதான்
தெரிந்துகொண்டேன்
என் வீடு நாய்க்குட்டியின் பெயர்
அவ்வளவு அழகு!
மழைகால இரவொன்றில்
முதல் முத்தம் தந்தாய்
இன்றுவரை விளங்கவில்லை
மழை நின்றபின் எழுவது
மண்வாசனையா, உன் வாசனையா ?
தொண்டைகுழி வற்றி விடும்வரை
உன்னோடு பேசிக்கொண்டிருக்க ஆசைதான்
ஆனால் என்ன செய்வது,
உன் அருகில் வந்த உடனேயே
என் தொண்டைகுழி வற்றி விடுகிறது

Friday 26 November 2010

நான் சொல்வதெல்லாம் உண்மை ......
காதலை தவிர வேறொன்றுமில்லை .

Thursday 25 November 2010

நெடு நாட்களுக்கு பிறகு
உங்கள் படுக்கையறையில்
சலிப்போடு உன் உள்ளாடைகளை
தேடும்போது
நீ தொலைத்த
என் காதல் கண்டுகிட்டகூடும்.
கனவில் மட்டுமே பேசுவாள்
என் காதலி
நேரில் எனை பார்க்கும் போதெல்லாம்
வேட்கபடவேண்டுமென்பதால்.
'மழைபோற்றி' கவிஞர்களுக்கெல்லாம்,
வீடிருக்கிறது.
"சாமி பேருக்கு அர்ச்சனை "
என்றபடி
உன் பெயரை முணுமுணுக்கிறேன். 
"பொறுக்கி"  என்கிறாய்
சரிதான் , நான் உன்னிடமிருந்து
கவிதைகள்  பொருக்கிகொன்டிருக்கிறேன்.

Thursday 18 November 2010

சம்மதம் சொல்ல  கூட வேண்டாம்
சிரித்து மழுப்பவாவது செய்யேன் .
நீ என்னை கடந்து சென்றாய்
காற்று உன்னை கடந்து சென்றது
நான் .......... காற்றானேன்
காற்று ........ இலையானது .
"களவும் கற்று மற"
என்றாராம் வள்ளுவர் .
தவறாக புரிந்து கொண்டாயோ காதலி ?
என் இதயத்தை மட்டும் களவாடி
என்னை மறந்து விட்டாயே .