Tuesday, 29 January 2013

நாற்றமெடுக்கும் கவிதைகள்!ரோஜாப்பூமாலைகளினூடே காண்பாய்,
முகமூடிகள் கழன்ற
என் பிணத்தின் அவலட்சண முகம்,
அருவருக்கத்தக்க முகம்.
பன்னீர், ஊதுபத்திகள் தாண்டி
நாசி துளைக்கும் நான் பாடிய கவிதைகளின் நாற்றம்,
வாழ்வெனும் கவிதையின்
பிணநாற்றம்!
கொஞ்சம் பொறுத்துக்கொள்,
எறிந்தடங்கிய சாம்பல்
உன்னைபோலிருக்கும்; ஏதுமற்று!


மகாயானம்!

எதிர்பார்த்ததெல்லாம்
நடந்தேறி விடுகின்றது ,
எதிபாராததொரு கணத்தில் !
ஜனனம்
நட்பு
காதல்
கோபம்
பிரிவு
மரணம்…………… அமைதி…………
மெளனம் ……………

இங்கே முடிந்த கதை,
எங்கேனும் தொடரக்கூடும் .
நகர்தல் காற்றுக்கும்
தொடர்தல் பயணத்திற்க்கும்
பேரியல்பு!
இது பித்ருயானம்
இது தேவயானம் 
இதுவே மகாயானம்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!


ஆசைப்பட்டதெல்லாம்
கேட்காமலே கிடைக்கும் வரம்,
உனக்கு மட்டுமே, வாய்த்திருக்கிறது!

எனக்கோ,கேட்டால்கூட கிடைப்பதில்லை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

வாழ்க்கையில் தேடினால்
மரணம்.
மரணத்தில் தேடினால்
வாழ்க்கை. 
சூரியனுக்கு எதிர்திசையில்தான் விழும்
நிழல்!
நடு மதியம் நிற்பாது போலும்
ஞானம்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

வானவில்
கடல்
ஓட்டு வீடு
கண்ணீர்
கிளிக்கூடு
கோழித்தூவல்
பூச்செடி
வெயில்
சமையலறை

வார்த்தைகளெல்லாம்
வண்ணங்களாக்கும் 
ஓவியக்காரி எங்கே? 
கண்டுகிட்டிய மயிலிறகு பார்த்து 
மயிலை நினைப்பது போல
சிதறி கிடக்கும் கவிதைகள் பார்த்து
உன்னை நினைக்கவோ?
என் வானத்தில்
எப்போது கேட்குமோ? ;
வானம்பாடி உன் சிறகடிப்பின் ஓசை!

உயிரானவனின் சூதில்
உருட்டப்படும் வாழ்க்கை,
அவளின் புடவை உருவியது
அவளின் தர்மன்!
தரவிறக்கி பார்த்திருக்கக்கூடும்
துர்யோதனன் .
திரவ்பதையின்
அந்தரங்க வீடியோக்கள்!

ஆனந்தவர்ஷினியின் பெயர்

தன் தெத்துபல் பதிய
அம்மாவை  கடிப்பாள்,

தன் மீது மோதிய கதவை
"அடி,அடி"

கால் தடுக்கிய வாசல் படி
தலையில்
"குட்டு,குட்டு"

கடித்து பறந்த கொசுவின் பின்னால் ஓடுவாள்
"பிச்சு பிச்சு"

அலுவலக கோப்புகளில்
மூழ்கி கிடக்கயில்
என்னயே சுற்றிவந்து கொசுவொன்று
ஆனந்த வர்ஷினியின்
பெயரை பாடி பறக்கும்.................

க்கோக்கோக்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்!


Tuesday, 22 January 2013

உனக்கும் ,காதலுக்குமான சதுரங்கத்தில்
வெட்டுப்பட்டு, வெளியே கிடக்கும்
ஒரு காய் .......!
காதலிடம் ,யாரும் ஜெயித்ததில்லை கண்ணே!
உன் தோல்வியை
நீ ஒப்புக்கொள்கயில், அது,
உயிரோடிருக்குமோ,என்னவோ!


கேட்கப்படாமல் சில பாடல்கள்

பிரவாகம் தடைபட்ட நதியென
தேங்கி கிடகிறது ,
மண் பாதையில்
கொலுசின் ஒற்றை மணி.
உன் பாதம் விட்டு,
நழுவியிருக்காவிட்டால்
இன்னும் ,எத்தனை பாடல் பாடியிருக்குமோ!

:'-(


Monday, 21 January 2013

*அவள் எனும் பெண்; "பூ"வெறும் பூ*பச்ச கரு நீலை புடவையில் ,
அகந்தைக்காரி
கண்ணம்மா
பிறர் குடும்பம் கலைத்தாள்!
தனிமை நிறையும் பொழுதுகளில்
"சுசீலா" கள்ள காதல் செய்தாள்!
ஆனந்தி விபச்சாரி,
காசை ,அவனிடம் வாங்கிவிட்டு
படுக்கை ,இவனுக்கு விரித்தாள் !

ஆண்களெல்லாம் கவிஞர்கள்.

கண்கள் மூடினால்
கவிதை பிறக்கும்!

முட்டாள்கள்,
பேராசைக்காரர்கள்,
கனவுலக காதலர்கள் ,
பிம்பங்களோடு உறவுகொண்டதில்
பிறக்கும் ,ஒரு கவிதை!
எல்லாம் மண்;
உண்மையும்,பிம்பமும்!
உன் தாய், "உன்"தாய்! 
உன் சகோதரி, "உன்" சகோதரி!
உன் காதலி ,"உன்" காதலி!
உன் மனைவி "உன்" மனைவி!
உன் மகள், "உன்" மகள்!
உனக்கானவளின் நீ, "நீ"யல்ல;
உன்னவளின் அவள் ;
அவள் மட்டுமே!
எல்லா வழியிலும் ,
ஏதோ ஒரு பூ !
கவனமும், உதாசீனமும்
உன் விதி!
ஏனென்றால்,
இது உன் வாழ்க்கை!


*கேட்பவர்களுக்காக ஒரு கதை*

ஒரு உலகம்
ஒரேயொரு உலகம்,
கோடி உலகம்
கோடிகோடி உலகம்!
ஒற்றை உலகை தொலைத்தவன்
காணாமல் போனான்,
தேடுவது அபத்தம் ,
தொலைத்தல் அபத்தம்
தொலைவது மிகச்சரி!
அழியட்டும் உலகம்,
எல்லாம் மாயை!
கரையில் பதிந்த
கால்தடங்கள் பொய்!
நீ பார்க்காத
உன் கால் தடங்கள் மெய்!
கரை நிறைத்த கால் தடங்கள் ,
கடலில்லை!


மந்திர புன்னகை

ஆசைகள் அனைத்தையும் விட்டுவிட,
ஆசைப்பட்டார் புத்தரென்று,
யாரோ சொல்லக்கேட்டேன்,
"அது சித்தார்த்தனென்று"சொல்ல
வாயெடுக்கையில்

அமைதியாய் கடந்து சென்றார் புத்தர்,

நானும் வந்து விட்டேன். 
அவர்களுக்காக
அங்கேயே ,மிதந்து கொண்டிருக்கலாம்,
புத்தர் பூத்த
புன்னகை வாசம்!


*ஒரு வெள்ள அபாயம் பற்றிய எச்சரிக்கை*

"பொதுமக்கள் அனைவரும் ,
மேடான பகுதிக்கு செல்லுமாறு………………"
தொலைகாட்சியில் செய்தி.

"டேய், கொன்னுருவேன்"! :-D


கவிதைக்கான
வார்த்தை தேடிக்கொண்டிருந்தபோது
உள்ளுக்குள் வந்து விழுந்தது, 
"க்ளுக்"கென்ற
உன் கள்ளச்சிரிப்பொலி,
"நிறைகுடம் தளும்பாது"
இன்று ,கவிதைகள் சிதறாது!


காலத்தை பற்றின உண்மைகள்
காதலுக்கும் பொருந்தும்!

காத்திருத்தல் என்பது பொய்.
இருத்தல் மட்டுமே ,
நிஜம்!

Wednesday, 16 January 2013

தும்பியும் மழையும்!

என்னை முற்றிலும் பிரித்து பிரித்து,
உன் முன் வரிசைப்படுத்தி
நிரப்பி வைத்திருக்கிரேன்!
ரகசியங்கள் ஏதுமற்ற நிர்வாணத்தை.
ஏற்றுக்கொள்ளவோ,
உதாசீனப்படுத்தவோ,
உரிமைகளும் சுதந்திரமும்! .

ஏற்றுக்கொள்ளிதலில் மகிழ்ச்சி,
உதாசீனத்தை பற்றின
புகார்களில்லை.

நீ ரசித்தாலும்
முகர்ந்தாலும்
பறித்தாலும் ,
பகிர்ந்தாலும்
கவனியது கடந்தாலும்
பூக்கள் பூக்கும்!

நீ வராத பாதையில் வேர்விட்டு பூத்த
காட்டுச்செடி இது,
நீ கடந்து சென்ற பின்னும்
பூக்கும்; ஆனால்
மழையில்லா நிலம் வறளும்!


Tuesday, 15 January 2013

பிடிவாதங்களின் சருகுகள்!

"ச்சட,ச்சட "என
பெருங்குரலெடுத்து,
காடு பற்றியெரிகிறது,

உள்ளிருக்கும் வார்த்தைகள்
உரசியுரசி ,

சருகில் விழுந்த
தீப்பொரி
படர்கிறது  ,
வன்மமான காட்டுதீயாக!

பற்றியெரிகிறது காடு

உயிர்க்காடு!
பச்சைமரம் தீப்பிடிக்க
சாபம் பலிக்க,
வார்த்தைகள்
நேசம்
கவிதை
காதல்
பிணக்கு
எல்லாமும் எரியட்டும் ,
"ச்சட,ச்சட"வென,
சிறகில் தீ பிடித்த பறவை,
பறந்ததோ,விழுந்ததோ?
தீ
அதுக்கு தெரியுமா? கூடும்,சிறகும்!
வார்த்தையும், மெளனமும்
சிலநேரம் "தீ"போல! 
நாம் மூட்டிய தீ
நம்மை எரிக்கட்டும்!


Monday, 14 January 2013

பொங்கலோ பொங்கல்

என் சின்ன சின்ன சில்மிஷங்களில்
சிலிர்த்தெழுவாள்,
அது பால் பொங்கல். 

ஆச்சரியபடுத்தும் பரிசுகளில்
முகம் மலர்ந்து சிரிப்பாள்
அது வெண்பொங்கல்.

பிற பெண்களிடம்
நான் ,சிரித்து பேசுகையில்
அவளிடம் பொங்குமே ஒரு பொறாமை ,அதுதான்
எனக்கு சக்கரை பொங்கல்.

"எரும மாடு" என்றபடி அவள் கொண்டாடும்
மாட்டு பொங்கல்
ரகசியம்!
எனக்கு மட்டுமானது,
உங்களிடம் சொல்வதற்கில்லை!

மூஞ்சி திருப்பி
முகம் சுருக்கி
முரண்டு பிடித்து
அப்பப்பா…………
நான்கு நாளுக்கொருமுறை
நான் "காணும் பொங்கல்".

சுள்ளென்ற சூரியனாய்,
சில்லென்ற நிலவொளியாய் ,
என்னோடு அவளிருக்கும்
நாளெல்லாம்

"பொங்கலோ பொங்கல்"!


போகி

பழையவை "எல்லாவற்றையும்"
ஒரு நொடியில் எரித்த
உன் "போகி",  அற்புதம்!
கொண்டாடு!
அப்போது போல தான் இப்போதும்
பறக்கிரேன் ,
ஆனால் ,நீ எரித்த கனவுகளின்
சாம்பலாக!


Saturday, 12 January 2013

இட மோசடி


ஓரமாய்  படுத்திருக்கிறேன்! 
உனக்கான மொத்த இடத்தையும்
ஆக்கிரமித்திருக்கிறது
இருட்டு!


அவன் என்னவன், எனக்கானவன்,எனக்கு மட்டுமானவன்!

ஓடி வந்து,
கிள்ளி வைத்து
கிச்சு கிச்சு மூட்டி,
"டேய், இந்த சட்டைல ரொம்ப அழகா இருக்கடா" என்று
முத்தமிட்டு ,
திரும்ப ஒடி வந்துவிடதான்
ஆசை!
பார்வையாலையே
பிய்த்து தின்னும்
"அவளுக கண்ணுல கொள்ளிக்கட்டை வைக்க"!
"ஏண்டா ,ஷேவ் பண்ணல???
சட்ட வேர நல்லாவே இல்ல!
எங்கிட்ட பேசாதே,போ"!
:-(


கொஞ்சு,
குழந்தையாக்கு 

"வயசுப்பொண்ணா நீ"???
அம்மாவின் வசைகளில் ,சிரிப்பு வர

இன்னும் ......
இன்னும் ,
குட்டி பெண்ணாக்கு!


நாள் முழுதும்
உன் நினைப்பெனக்கு,
சொன்னால் ,நம்ப மாட்டாய்,
குக்கரின் விசிலுக்கு
நடனமாடி ரசிக்கிரேன்,

"நம்பித்தொல"!


சில நேரம் , என்னை
தனிமைக்குள் தள்ளிவிடும்,
உன் நினைவுகள்.

என் எல்லா தனிமையிலும்
எட்டிப்பார்த்து சிரிக்கிரது 
எனக்கே எனக்கு மட்டுமான,
உன் நினைவுகள்!


இடமிருந்து வலம்
வலமிருந்து இடம் 
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
வாழ்வின் ,

குறுக்கெழுத்து கேள்விகளின் பதில்கள்,
என்னிலிருந்து உனக்கும்,
உன்னிலிருந்து எனக்குமாக
பயணிக்கின்றன, ஒற்றையடிப்பாதையில், இனிமையாய் ஒரு பாடல்
முணுமுணுத்து!


இடமிருந்து வலம்
வலமிருந்து இடம் 
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
வாழ்வின் ,

குறுக்கெழுத்து கேள்விகளின் பதில்கள்,
என்னிலிருந்து உனக்கும்,
உன்னிலிருந்து எனக்குமாக
பயணிக்கின்றன, ஒற்றையடிப்பாதையில், இனிமையாய் ஒரு பாடல்
முணுமுணுத்து!


Wednesday, 9 January 2013

எழுத்தோலை கவிதை போட்டிக்கான என் கவிதைகள்!

1,  *இசையும் இயலும் நாடகமும்!*

மேடைகளில் சிம்மம் ,
என் தமிழ்,
கவிதைகளில், சொட்டும் தேன்,
கதைகளிலோ ,நிலாக்காலம்!!!

ஆஹா, என் தமிழ் அழகு!
நம் தமிழ் , அழகோ,அழகு!   ***

"எங்கடா படிச்சே "கேட்டேன்.
"கார்ப்பரேசன் ஸ்கூல்ல" என்றான்!

என்னடா செய்ரேன்னு கேட்டான்,
"கார் வொர்க்ஷாப்"புன்னேன்!

நலம்,
கன்னம் சுருங்கி
கண்கள் குழிவிழுந்து,
பார்வை மங்கி
கை கால் நடுங்க,
கைத்தடி தேடித்தடவும் ,

மூன்று பிள்ளை பெற்று வளர்த்த
முதியோர் இல்ல தாய் போல,
அன்னை தமிழின்
இன்றைய நிலை,
மிக்க நலம்!
**************
2,

அப்பாவின் அப்பா பெயர்,
அப்பாரு.
அப்பவின் பெயர், அப்பா.
என் பெயர் "டாடி"!
படி மகனே,
குலம் செழிக்க.......
குடும்பம் செழிக்க .....
நன்றாய் படி!
******-********
3,

குப்பை கிளறும், ஒரு மென் கரம்.
கல் சுமக்கும் ,
இளந்தலை .

கீழே கத்தி வைத்து
கம்பி மேல் நடக்கிறது
நாட்டின் கால்கள்.  
விதை நெல்லை
விற்று தின் னும்
விவசாயிகள் நாம் ,
காலத்தின் முச்சந்தியில்
நாளை நிற்ப்போம் 
அம்மணாமாய்!
ஐயோ,வெட்கக்கேடு!


எத்தனை முத்தம்
எத்தனை காதல்
எத்தனை வலிகள்
எத்தனை அன்பு
எத்தனை வேலை
எத்தனை தகுதி
எத்தனை வியப்பு
எத்தனை காத்திருப்பு ,இடம் மாறி சென்றிருக்கும்???
கடவுள் நிலை கிட்டிய
தபால் பெட்டி.
தபால் பெட்டி நிலை கிட்டிய
கடவுள்!


முகம் திருப்பியவளே,
முதுகு முழுதும் கவிதைகள்
கோபம் குறை,
நெற்றி காட்டு!


நான் செவிடன்,
பிறவிகுருடு
சுழலட்டும் சக்கரம்!
.
.
.
.
.
.
பூவின் வாசனை!
ஐந்து விரல்கள் .....
பற்றிக்கொள்ளுதல் சுலபம்,

நீட்டுதல்.…………??????


ஊமை புத்தன்!

*புத்தனிடம் கேட்டது*

சலிப்பற்ற வெறுமை உணர்வு ,
ஞானமோ?


………………!


கண்கள் திறந்தபோது,
ஏதோ நழுவிக்கொண்டிருந்தது!
ஓ, தூக்கமாக இருக்கும்!
கண்கள் மூடினேன்,
அதுஅது அங்கங்கே,
ஓ, நானாக இருப்பேன்!

ஓடி பிடித்து விளையாட்டு,
ஓட்டவுமில்லை
பிடிப்புமில்லை,
அமைதியில்!

"கவிதை",
யார் பெயரிட்டது?
நெஞ்ச புண்ணிலிருந்து வடியும் சீழுக்கு.

மண் சிலேட்டையும் ,
மை பூண்டையும்
காணக்கிடைக்கவில்லை ,
பழைய
உன்னையும் என்னையும் போலவே!


நீ பேசிக்கொண்டிருக்கயில்,
அன்று,
அப்போது ,
என்ன சொன்னாய்???
மறந்து விட்டது!
முகம் மட்டுமே ஞாபகம்!


கவிதைகள் தீர்ந்த வெற்றுத்தாளில்
என்ன தெரியும்???
கருப்பு புள்ளிகளா???

எல்லா விளக்கங்களும்
கொஞ்சம் தள்ளியே நிற்க்கின்றன;
உன்னிடமிருந்து!

எந்த தடயங்களையும் விட்டு விடாமல்
முழுதாய் மறைவதெப்படி???

*மாலகோவில்*


நெல்லுக்குத்தும் அம்மிக்குள்ள
என் நெஞ்ச வச்சு குத்துரா,
கல்ல கொத்தும் உளியப்போல
கண்ணு ரெண்டையும் கொத்துரா,
கரும்ப சக்கையாக்கி
உசிரயெல்லாம் புழியுரா,
பிஞ்சு போன செருப்புகால,
நைஞ்சு போயி நடக்குது மனசு,
களத்து மேட்டு பக்கம்
கதிரறுக்க போகயில,
நீ இல்லாத என்ன
மாடு கூட மதிப்பதில்லெ,
தக்காளி வெல கொரஞ்சிடிச்சி,
மாட்டோட மடி வத்தீரிச்சி ,
ஏன்டி அன்னக்கிளி,
எப்பொ முழுசா கொல்லப்போறே???
நீ மில்லுக்கு போற வழியெல்லாம் ,
சூரி முள்ளு, பாத்துப்போ!


Sunday, 6 January 2013

அவசர உதவி,எல்லாம் முடிந்தது!
ஒரு விபத்து,
ஒரேயொரு விபத்து
எல்லாம் முடிந்து விட்டது,
பறவையின் வீடு,
கவிஞனின் பூக்கள்
ஆடுமேய்க்கும் பாட்டிக்கான நிழல்,
எல்லாம்!
நேற்றைய பேய்க்காற்றில்
விழுந்திருக்கலாம்!
விபத்துத்தான்,
கோடாரி தடங்களில்லை ,
அதனால் கொலையில்லை,
ஒரு விபத்தில் எல்லாமே முடிந்துவிடும்
பெரும் விபத்து, கவனம் தேவை!


முத்தங்களல்ல ,
கல்லறைகள்
நட்ச்சத்திரங்கள்!

தனிமை நிறம்

இரு இயந்திரங்களின் செயல்பாடென ,
ஒரு நீலப்படம் ஓடுகிறது,
சலுப்புற்று கிடக்கும் உடலை
வெயில் மேயும்  .
காய்ந்த செடிகளிடையே பூவைத்தேடி
எங்கும் அமராது
படபடத்து பறக்கும்
பட்டாம்பூச்சி 
கண்கள் மூடினால் ,
என்னிடம் இருட்டுமில்லை
கருப்புமில்லை,
ஒரே சாம்பல் நிறம் .
உன்னை கடப்பதை போலவே
எளிதாய் இல்லை
இந்த நாட்களை கடப்பதும்!
உன்னோடு சேர்ந்திருக்கயில்
அனாதயாய் திரியவிட்ட
"என் தனிமைக்கும் "
இப்படிதான் வலித்திருக்கும் ,
பாவம்!


சுபம்!
வணக்கம்!
சில கதைகள் ,
ஏதுமற்று முடிகின்றன,

தொடரும்…………
சில துளி கண்ணீரோடு!


*"சனியனே"*


சனி பகவானுக்கு மட்டும்
மிக பணிவாய் வணக்கம் வைத்து,
கன்னத்தில் போட்டுக்கொண்டு,
முணுமுணுத்தபடி
சுற்றுகிராள்,
கை கட்டி வேடிக்கை பார்த்தபடி
என் ரூபத்தில் சிரிக்கிறது
அவளின் சனி!

"இன்றைக்கும் உறங்க விடும் எண்ணமில்லை"!

:-D

உச்சி கொம்பில் அமர்ந்திருந்தது குயில்,
வேலு "கூ" என்க
நான் "குக்கூ" என்க,
அது "க்கா , க்கா" என்று பறந்து போனது ,குயில்.
"காக்கை குயில்"!

பொண்டாட்டி க்காரி

*செய் அல்லது செத்துபோ  *  

சொல்வதை செய்ய வேண்டும்
இல்லையேல்
"சொல் வதை" செய்வாள்!!!!"துணி துவைப்பது அவ்ளவு பெரிய விஷயமேயில்லை"!!!! :-D

அம்மா உட்பட
எல்லா பெண்களுக்கும்
உன் சாயல்,
நீ எப்படியிருப்பாயோ,
எப்படி கண்டுபிடிப்பேன் உன்னை???

நீ மட்டுமாக இருக்கும் உன்னை!!!

இரண்டு கவிதை , ஒன்றாக ! :)

சூறைக்காற்றிலாடும்
கோவில் மணியை போல, 
குழியிலிறங்கிய சொகுசு பேருந்தின்
தொங்கும் கைப்பிடிகள்!

***

காற்றில் சருகு பறக்க,
ஒற்றை ஜடை பெண்ணே,
உன்னருகே பார்
ஒரு கவிதை!

காதல்

வண்ணத்து பூச்சியின்
சிறகின் கீழ் நசுங்கும்
காற்றுக்கு பெயர்

கவிதை நன்று
மெளனம் மிக நன்று
மெளனமற்ற கவிதையும்,
கவிதையற்ற மெளனமும்
இருத்தலில் துன்பம்!

வய்க்கோல் பாரவண்டி
காளைகள் பசித்து களைக்கும்
தார்க்குச்சி குத்த
மெதுவாய் நகரும்
வாழ்க்கை நெடுந்தொலைவு!

ஆளில்லாத லெவல் கிராஸிங்
அடிபட்டு சாகும்
ரயில்பூச்சி!

கணக்கு

உடலிலுள்ள
எல்லா கார்பணையும் எடுத்தால்
900 பென்சில் செய்யமுடியுமாம்,
அதில் எத்தனை கவிதைகள் எழுதலாம்,
உன்னை பற்றி?

புறவழி சாலை

மனித இனத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்
படிகமாக பதிந்து கிடந்தது ,சாலையில்.
நசுங்கி காய்ந்த தவளை உடல்

Friday, 4 January 2013

*ஆயிரம் நாவு*


தோழிகளின் சம்பாஷணை,
இவள் கண்கள் விரித்து ஆச்சர்யப்பட்டவாரே
பேசிக்கொண்டிருந்தாள் ,
இடையிடையே
முன்னால் விழும் முடியை ஒதுக்கியவாறு,
கண்விழிகள் படபடக்க,
அவளின் சாரியை (ஒரு பூவை) தொட்டு
ஏதோ சுட்டிக்காட்டியவாறு
ஒரு வேளை ,
புடவை பேச்சாக இருக்கலாம்,
அல்லது வேறு எதுவோ, 
நேரம் பார்த்தாள்
படபடத்தாள்
ஓயாமல் பேசினாள்
அவள் என்ன சொன்னாளோ,
இவள் சிரிப்பு சப்தம்
உச்சஸ்தயியில் வெளிப்பட்டது

அலுவலகத்தில் நடந்த
ஏதேனும் கிசுகிசுப்பை பகிர்ந்தார்களோ?
மிக நீண்ட நேர உரையாடல்
அவர்களுடையது!
உலகின் எல்ல விஷயங்களையும்

இன்றே பேசி தீர்ப்பதாய்
முடிவெடுத்தவர்கள் போல!
இவளின் அலைபேசி
சிறு அதிர்வுடன் ஒளிர்ந்தது ,
ஒரு முறை ஆச்சரியப்பட்டு மென் புன்னகை பூத்தாள்
பின் பேச்சே இல்லை ,
மற்றவளின் பேச்சிற்க்கு
புன்னகையும் தலையசைப்பும் மட்டுமே!
எது எப்படியோ
அவளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்து
அவளும் புன்னகை பொழியட்டும், 
அவனின் குறுஞ்செய்தி!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!


*என்னை,தூக்கிலிடு;என்னை மட்டும்!*


உள்ளாடையோடு
கட்டிப்பிடிக்கிராள் ஒருத்தி!
அவன் முகச்சவரம் செய்தவன் 
கடித்து தின்கிறாள்  ,
வாசனை திரவியம் பூசினவனை,
அவனோடு முத்தமிட
அவளுகளிடையே பெரும் போட்டியே நடக்கிறது ,
அவன் ,வாய் மணக்க
பல் துலக்கியிருக்கிறான்!
எனக்கு தெரிந்தது இதுதான்
கொஞ்சம் பணமிருந்தால்
பொருள் வாங்கலாம்,
மேலும் கொஞ்சம் கூட இருந்தால்
அவளையும் வாங்கலாம்,
பெருநகர வணிக வளாக துணிக்கடையில் 
லேசானஆடையில்
எடுப்பான மார்பில்
ஒட்டப்பட்டிருந்தது
அவளுக்கான விலை!

நான் கற்ப்பழித்தேன்
என்னிடம்
நல்ல ஆடையோ,
முகச்சவரமோ,
நிறைய பணமோ இல்லை!
நான் ,உன்னை கற்ப்பழித்தவன்
எனக்கெதிராய் போராடு,
தூக்கு வாங்கி தா!
கற்ப்பழிப்புக்கு நல்ல தண்டணை
தூக்குதான்,!
நடிகையை மன புணர்ச்சி கொள்ளும் ,
அண்ணணிடமும் ,அப்பனிடமும்
உன் தங்கைக்கு பயமுமில்லை,
பாதுகாப்புமில்லை!


*பூரணி*

புண் வந்த பிச்சைக்காரனை அலட்சியபடுத்தினாள்,
பின் ,என்ன நினைத்தாளோ?,
குளித்துவிட்டு வரச்சொன்னாள்!


*நாயகன்*

நடுப்பக்கத்தில்
நாயகியை இறுக்கியபடி ……………

ஒரு ஸ்டாப்ளர் பின்!

மூக்கு நோண்டுவது
காது குடைவது
சொத்தைப்பல் குத்துவது,
எல்லாம் ஒரு சுகம் .
நினைவுகளின் புண்ணை வருடுவதில்
கவிதைக்கான கிளர்ச்சி!

"எல்லா துயரங்களிலும்,
உன் கூடவே இருப்பேன்"!
சினிமா வசனம் பேசாதேடீ!
நீ, கூட இருக்கயில்
வருவதற்க்கு பெயர்
துயரமா,என்ன???