Monday 21 January 2013

*அவள் எனும் பெண்; "பூ"வெறும் பூ*



பச்ச கரு நீலை புடவையில் ,
அகந்தைக்காரி
கண்ணம்மா
பிறர் குடும்பம் கலைத்தாள்!
தனிமை நிறையும் பொழுதுகளில்
"சுசீலா" கள்ள காதல் செய்தாள்!
ஆனந்தி விபச்சாரி,
காசை ,அவனிடம் வாங்கிவிட்டு
படுக்கை ,இவனுக்கு விரித்தாள் !

ஆண்களெல்லாம் கவிஞர்கள்.

கண்கள் மூடினால்
கவிதை பிறக்கும்!

முட்டாள்கள்,
பேராசைக்காரர்கள்,
கனவுலக காதலர்கள் ,
பிம்பங்களோடு உறவுகொண்டதில்
பிறக்கும் ,ஒரு கவிதை!
எல்லாம் மண்;
உண்மையும்,பிம்பமும்!
உன் தாய், "உன்"தாய்! 
உன் சகோதரி, "உன்" சகோதரி!
உன் காதலி ,"உன்" காதலி!
உன் மனைவி "உன்" மனைவி!
உன் மகள், "உன்" மகள்!
உனக்கானவளின் நீ, "நீ"யல்ல;
உன்னவளின் அவள் ;
அவள் மட்டுமே!
எல்லா வழியிலும் ,
ஏதோ ஒரு பூ !
கவனமும், உதாசீனமும்
உன் விதி!
ஏனென்றால்,
இது உன் வாழ்க்கை!


No comments:

Post a Comment