Wednesday 23 September 2015

புருசன்காரனும் பொண்டாட்டிகாரியும்

அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.

ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?

உன் புருசன்

சொல்லவேல்லா,இதெப்பொருந்து?

அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ?  என்று கேட்ட போது

கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று

அன்றிலிருந்து

புருசன்காரனும் பொண்டாட்டிகாரியும்

அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.

ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?

உன் புருசன்

சொல்லவேல்லா,இதெப்பொருந்து?

அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ?  என்று கேட்ட போது

கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று

அன்றிலிருந்து

என்னவள்

நான் உன்னில் மயங்கி கிடக்கிறேனடி தோழி என்றேன்
மார்போடு சேர்ந்தபடி
"தெரியும்" என்றாள்
"நானும் , நானும்" என்று கத்தவும் முணுமுணுக்கவும் தொடங்கியது
மல்லிகை பூவும்
கொலுசும்
ஸ்டிக்கர் பொட்டும்
ஜிமிக்கியும்
மோதிரமும்
வளையலும்

நல்லவேளை அவளுக்கு கேட்கவில்லை

இந்த உலகில் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும்
ஒற்றை ஜீவன் நான் மட்டுமேயென
நினைத்து மொத்த காதலையும்
என்னில் பொழிகிறாள்

சின்ன சின்னதாய் சில உதவிகள்

கடவுளேய்………எனக்கூன்னு வந்து வாச்சிருக்கே ஒண்ணு

சொல்லூ,
எனக்காக எப்பாவது, எதாவது செஞ்சிருக்கியா?
உலக மகா சோம்பேறி!
*****
"அடியேய், அன்னிக்கு சேலை உடுத்தைல ……………
*****
ஐய்யாயொஓ……… போதும் போதும்

இதுவரை தாங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி
நீங்க உங்க வேலைய பாருங்க சார்

****

லீவு நாட்கள்

"நாளைக்கு நான் ஊருக்கு போக போறேன், ஒரு மாசம் முடிஞ்சுதான் வருவேன்"

சரி போயிட்டு வா takecare

உனக்கு வருத்தமாயில்லையா?

இப்ப இல்ல நீ போயிட்ட ஒரு ரெண்டு நாள் ஃபீல் பண்ணுவேன்  அப்புறம் மறந்துடுவேன்

என்னது மறந்துடுவியா? போடா உங்கூட டூ

அப்பொ மறக்காமிருக்க ஏதாவது குடித்திட்டு போ

ஏதாவதுனா என்னது?

ஏதாவதுன்னா ……ஏ……தாவது

ஓஹ்……… சரி கண்ணமூடு

-
-
-
-
அவள் கிள்ளி வைத்த இடத்திலொரு பூ பூத்தது
-
-
-
போதுமா , இனி மறக்கமாட்டியே?

அடியே எருமெ அதுக்கு  இப்பிடயா  !ஆஹ்.

"ஹ ஹ ஹா"

இருடீ,உன்ன்ன்ன்ன்ன்னே
-
-
-
அவளுக்கு வலிக்காமல்
வெட்கத்தில் சிவக்க வைத்த
பூந்தோட்டம் ஒன்றை பரிசளித்தேன்
-
-
-
பிரியும் பாதையில்
கண்களால் கட்டிப்பிடித்தாள்
கண்கலங்கி விலகிப்போனாள்.

miss u டி கோணவாச்சீ

காதல் பெருமழை

முதல் துளி பட்டதும்
உயிர் சிலிர்க்கும்
ஒரு புல்லின் வேராய்
எல்லா மழையிலும்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்

ஒரு மழையென்பது
கோடி கோடி துளிகளாலானது
இருவரும் பங்கிடும் முத்தங்களால்
நம் காதலும் ஒரு பெருமழை போல் தானே கோணவாச்சீ

நீ கொட்டி தரும் முத்த துளிகளில்
முழுக்க நனைகிறேன்
ஒரு மலை முகட்டை போல

பொங்கி வழிந்து அடித்து நுரைத்து
என்னையே அடித்து செல்கிறது
என்னுள் எழும் ஒரு காட்டாறு
உன் காதலெனும் காட்டாறு

என்னவள்

நான் உன்னில் மயங்கி கிடக்கிறேனடி தோழி என்றேன்
மார்போடு சேர்ந்தபடி
"தெரியும்" என்றாள்
"நானும் , நானும்" என்று கத்தவும் முணுமுணுக்கவும் தொடங்கியது
மல்லிகை பூவும்
கொலுசும்
ஸ்டிக்கர் பொட்டும்
ஜிமிக்கியும்
மோதிரமும்
வளையலும்

நல்லவேளை அவளுக்கு கேட்கவில்லை

இந்த உலகில் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும்
ஒற்றை ஜீவன் நான் மட்டுமேயென
நினைத்து மொத்த காதலையும்
என்னில் பொழிகிறாள்

பூ

படுக்கையில் சிதறிக்கிடக்கும்
மல்லிகை பூக்களுக்கு மத்தியில்
பூவோடு பூவாக  கிடந்திருந்தாள்
தேன் குடித்து அரை மயக்கத்திலிருக்கும்
ஒரு கருவண்டு போல
இரவு முழுதும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெரும் பசி

பசி என்றேன்
வெட்கத்தை பரிமாறினாள்

இன்னும் பசிக்கிறதே என்று கூவினேன்
என்னை மென்று தின்று
ஏப்பம் விட்டு சிரிக்கிறாள் கள்ளி

"அடியேய்     …… ………… ………… ஹ ஹ ஹா"

"போடா எருமே"

மரியாதையா பேசி பழகுடி, அடிச்சு பல்ல கழட்டீருவேன்

"போங்க எரும சார்".

கவிதைக்கான ஆஸ்கார்

இந்தா மைசூர் பா

ம்ம், நல்லாருக்கு, எங்க வாங்குனே

வாங்கல , வீட்ல செஞ்சது , நல்லாருக்குல்லே !
எங்க அப்பா இனிப்பெல்லாம் நல்லா செய்வாரு

அதான் தெரியுமே
-
-
" லட்டு,மைசூர்பா,ஜிலேபியெல்லாம் அல்ல
உன் அப்பா உண்டாக்கியதில்
எனக்கு தெரிந்து
ஆகச்சிறந்த இனிப்பு நீதான்"
-
-
எப்புடீ?

ஐயோ , கவிதெ கவிதே!
இந்த வருஷத்தோட ஆஸ்கார் உனக்குத்தான்

அப்படி , கவிதைக்கான ஆஸ்கார் பெற்ற
உலகின் முதல் கவிஞனானேன் நான்.

சுபம்.

ராட்சசி

நானும் அண்ணனும் ஷாப்பிங் போறோம் , வந்தா மீட் பண்ணலாம்

வேணான்டீ, எதுக்கு சும்மா!!! இன்னொரு நா தனியா வரைல பாக்கலாம்

ஓ, அப்பொ எம்மேல உனக்கு அவ்ளோதான் லவ்வா? சரி விடு

யப்பா சாமீ, வர்ரேன். உங்கண்ணன் பாத்துட்டான்னா என்ன செய்றது

நீ என்னமோ செய்யீ, எங்கிட்ட கேட்டா
எப்ப பாத்தாலும் எம்பின்னாடி சுத்தி
நீதான் டிஸ்டப் பண்ரேன்னு

போட்டு குடுத்திடுவேன்……ஹ ஹ ஹா

லீவு நாட்கள்

"நாளைக்கு நான் ஊருக்கு போக போறேன், ஒரு மாசம் முடிஞ்சுதான் வருவேன்"

சரி போயிட்டு வா takecare

உனக்கு வருத்தமாயில்லையா?

இப்ப இல்ல நீ போயிட்ட ஒரு ரெண்டு நாள் ஃபீல் பண்ணுவேன்  அப்புறம் மறந்துடுவேன்

என்னது மறந்துடுவியா? போடா உங்கூட டூ

அப்பொ மறக்காமிருக்க ஏதாவது குடித்திட்டு போ

ஏதாவதுனா என்னது?

ஏதாவதுன்னா ……ஏ……தாவது

ஓஹ்……… சரி கண்ணமூடு

-
-
-
-
அவள் கிள்ளி வைத்த இடத்திலொரு பூ பூத்தது
-
-
-
போதுமா , இனி மறக்கமாட்டியே?

அடியே எருமெ அதுக்கு  இப்பிடயா  !ஆஹ்.

"ஹ ஹ ஹா"

இருடீ,உன்ன்ன்ன்ன்ன்னே
-
-
-
அவளுக்கு வலிக்காமல்
வெட்கத்தில் சிவக்க வைத்த
பூந்தோட்டம் ஒன்றை பரிசளித்தேன்
-
-
-
பிரியும் பாதையில்
கண்களால் கட்டிப்பிடித்தாள்
கண்கலங்கி விலகிப்போனாள்.

miss u டி கோணவாச்சீ

கண்ணுள்ள காதல்

எத்தனை நெரிசலிலும்
கூவும் ஒரு குயில்
எங்கேனும் பூத்திருக்கும் ஒரு மலர்
கேட்கவும் காணவும்
காதல் வேண்டும்
குயில்களும் பூக்களுமில்லா
இடமென்றால்
கண்கள் மூடி உன்னை நினைப்பேன் கோணவாச்சீ
ஐயோ , அந்த கணமெனை ஆனந்தத்தில் கொல்லும்
அழகீ உன் கேலி சிரிப்பு

காதல் பெருமழை

முதல் துளி பட்டதும்
உயிர் சிலிர்க்கும்
ஒரு புல்லின் வேராய்
எல்லா மழையிலும்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்

ஒரு மழையென்பது
கோடி கோடி துளிகளாலானது
இருவரும் பங்கிடும் முத்தங்களால்
நம் காதலும் ஒரு பெருமழை போல் தானே கோணவாச்சீ

நீ கொட்டி தரும் முத்த துளிகளில்
முழுக்க நனைகிறேன்
ஒரு மலை முகட்டை போல

பொங்கி வழிந்து அடித்து நுரைத்து
என்னையே அடித்து செல்கிறது
என்னுள் எழும் ஒரு காட்டாறு
உன் காதலெனும் காட்டாறு

ஏதேதோ

கிளையில் அமர்ந்திருக்கும் ஒற்றை காகம்
கள்ளிச்செடியின் நிழல்
அசைபோட்டு படுத்திருக்கும் பசு
செடிகளையும் இலைகளையும் சுற்றிவந்து
பூக்கள் தேடும் பட்டாம்பூச்சி
காற்றில் அலைகழிந்து படபடக்கும் அதன் மென் சிறகுகள்
மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் ரெட்டைவால் குருவி
-
-
-
-
-
-
-
ஏதேதோ எழுதி தனிமை கடக்கிறேன்  நான்

நீ என்ன செய்துகொண்டிறாய் கோணவாச்சீ?

கைவிடுத்து டாட்டா காட்டும் தாயை
கேவிக்கேவி அழுதபடி திரும்ப திரும்ப பார்த்து
கையசைத்து பள்ளிசெல்லும்
சிறு குழந்தை போல
நாம் கைகோர்த்து நடந்த நாட்களை 
மனதால் கடந்து வருகிறேன்
கோணவாச்சி-
-
-
-
-

தாயின் கையை உதறிவிட்டு
விளையாட ஓடும் சிறு பிள்ளை போல
இன்றைய நாளை விட்டு
உன் கரம் பற்றும் நாளெண்ணி
குதியாய் குதித்தோடுது
இந்த மனம் கோணவாச்சீ