Wednesday 31 October 2012

*நான் தமிழன்*

பெருமானுக்கு,
பெரிய கோவில் கட்டினான்
ராஜராஜன்.
காவிரிக்கு
கல்லணை கட்டினான்
கரிகாலன்.
உலகமே வியக்க
நாமும் கட்டினோம்
ஒரு கோவில்
குஷ்புவுக்கு!

***
அங்கே ,
கொத்து கொத்தாய்
செத்து விழுந்தது
மக்கள் கூட்டம்.
இங்கோ,
தியேட்டர் முழுக்க
விசில் பறக்கும்
சினிமா நாட்டம்!

*** 

திருக்குறள்,
திருவாசகம்,
பத்துப்பாட்டு;
மானாட,மயிலாட
குத்துப்பாட்டு!

***
அச்சம்,மடம்,
நாணம் பயிர்ப்பு;
"அவுத்திப்போட்டு ஆடுவதுக்கு"
நம்மில்
யார் பொறுப்பு?

*** கில்லி,கபடி,கிளிக்கரம்;
நாம, வெளிநாட்டு வெளயாட்டுல
நேரத்த கழிக்கிறோம்!

***
எலந்தப்பழம் ,பனியாரம், அச்சு முறுக்கு;
வித்து ,காசு பண்ண
இன்னும் என்ன மிச்சமிருக்கு?

***

அன்றோ,
பார் போற்றும்
நம் நாடு;
இன்றோ ,
BARஐ மட்டும் போற்றுது
தமிழ்நாடு!

***
பத்தாயிரம் வருசத்து
பண்பாடெல்லாம்
கட்டிகாக்க
தலைவன் எங்கே?  
அம்மாவின்
துணியவுத்து
ஏலம் போட,
அண்ணன் தம்பிக்குள்ள
அடிதடி இங்கே!


1 comment:

  1. ஓங்கி அறைந்தது போல் உள்ளது, இந்த கவிதை.. நல்லா நறுக்குன்னு சூடு வச்சாப்புல சொல்லியிருக்கீங்க தம்பி ... அருமை !

    ReplyDelete