Saturday, 17 October 2015

ஆட்டுக்குட்டி

மழையும் வெயிலும்
தங்க மீனும் money plantம்
வானவில்லும் விண்மீனும்
பூக்களும் குருவிகளுமாய்
பெருமகிழ்சி கொண்டதாய் இருக்கிறது
அவளின் உலகம்
கைபிடித்து வாஞ்சையோடு
என்னையும் சேர்க்கிறாள்
அன்புகொண்டு என்னை
ஒரு ஆட்டுகுட்டியாய் உருமாற்றம் செய்கிறாள்

ஆட்டுக்குட்டியின் செல்ல பெயர்
"எருமெ"யாம்

No comments:

Post a Comment