Saturday 17 October 2015

முத்தமாற்று முறை

சிறு ஊடலுக்குப்பின்
ஒரு முயல் குட்டியை போல
முக ஜாடை வைத்துக்கொண்டு
சமதானம் பேச வருகிறாள்

போடி போடி

டேய் ஒரே ஒரு முத்தம் குடுடா என்று கெஞ்சுகிறாள்,
கொஞ்சுகிறாள் ராட்சசி

கேட்ட உடனே தர என் முத்தமென்ன
அவ்ளோ எளப்பமா?

சரி ,அப்பொ என்னோட பத்து முத்தம் தர்ரேன்
அதுக்கு பதில,
ஊருல கெடைக்காத பொக்கிஷம்
உன்னோட ஒரு முத்தம் குடு
சரியா?

உடன்படிக்கை ஒப்பந்தமானது

வீடு மொத்தம் நிறைந்து கிடக்கிறது
எங்கள் முத்தங்கள்

No comments:

Post a Comment