Thursday, 30 May 2013

ஆழ்ந்துறங்கும் குழந்தையாய்
அமைதியாய் கிடக்கிறது
இவ்விரவு.
உறங்கும் குழந்தையின் மூச்சைப்போல
காற்றில் மிதக்கிறது
நீ எப்போதும் முணுமுணுக்கும்
அந்த பாடலின் கடைசிவரி
மூச்சை வெளியேற்றும் சப்தமென
மெதுமெதுவாய் துடிக்கிறதென் இதயம்.
காதலில் உறங்க முடிவதில்லை,
ஏதுமறியா ஒரு குழந்தையென.

No comments:

Post a Comment