கண்கள் மூடி,
விரல்கள் மடக்கி,
ஒரு பூவைப்போல உறங்குகிறது
இன்று பிறந்த பிஞ்சுக்குழந்தை,
அலுங்காமல்
குலுங்காமலெடுத்து
கைய்யில் தருகிறாள்,
பயமும் சுவாரஸ்யமும் பொங்க
பெற்றுக்கொள்கிறேன்,
அவள் புத்தாண்டு வாழ்த்துகளை!
அவள் காதலைபோலவே
அழகாய் இருக்கட்டும்
இந்த ஆண்டு!
Monday, 31 December 2012
கவிதை கடை
எப்படியேனும் வாங்கி கொள்வாள்
ஒரு கவிதையை!
கால் மேல் காலிட்டு ,
கண்கள் விரித்து,
தலை உயர்த்தி
ஒரு மஹாரணியாய் உத்தரவிடுவாள்!
செல்லம் கொஞ்சி பெற்றுக்கொள்வாள்,
சிலநேரம் அழுது
சில நேரம் முகம் சுருக்கி,
குற்றம் கண்டுபிடித்து
முத்தமிட்டு
கோபபட்டு,
வெட்க்கப்பட்டு
இன்னும் இன்னும்,
எப்படியேனும்!
பொம்மைகடை
குழந்தைகளின் வியப்பை சேகரிப்பது போல்,
ஏதேனும் ஒரு கவிதை படைத்து
உன்னை சேமிக்கிறேன்
உள்ளிளுள்ளே!
நீ கேட்பது எதுவோ, அது!
முத்தம் தருவதும்
கவிதை எழுதுவதும்
வேறொன்றும் தெரியாது ,எனக்கு!
கவிதையும் அறைகுறை பழக்கம்,
டீ, உன் மாதமுறை நாட்களில்
நான் என்ன செய்யவேண்டும்,
சொல்லேன்!
பாத்திரம் கழுவட்டுமா?
Saturday, 29 December 2012
தேடல்
உண்மை சிக்குவதில்லை,
கிடைப்பது உண்மையில்லை,
சோர்வு தாங்கவில்லை
ஆவல் குறைவதில்லை,
உருவாக்கு , ஏதேனுமொன்றை.
ஒரு கடவுளை
ஒரு சாத்தானை
ஒரு கவிதையை
ஏதேனுமொன்றை,
தூக்கியெறி,
பின் தேடு,
கண்டடை,
கொண்டாடு!
உருவாக்கி,
தொலைத்து,
தேடுகிறேன் ........
என்னை!
வெறும் பொம்மை
பொம்மை கடையில்,
வரிசையாய் அடுக்கிய
பொம்மைகளுக்கிடையே,
பத்தோடு பதினொன்றாய் இருந்திருக்கலாம்!
சிவப்பு
மஞ்சள்
நீலம்
பச்சை,
என்னை தேர்ந்தெடுத்தாயே,
ஸ்பரிசங்களில் உயிர் தந்தாயே,
உயிரற்ற பொம்மையாகவே இருந்திருக்கலாம்!
நேசித்த பின் தானே தெரிகிறது
நிராகரிப்பின் வலி!
கோப்பை கவிதைகள்
மதுவில் "என்ன" இருக்கிறது????
உன் கேள்வி புரிகிறது!
மதுவில் "என்னதான்" இல்லை!!!!!
என் பதில புரியாது!
***
கடைசி "ச்சிப்பை" உறிஞ்சி விட்டு,
பிளாஸ்டிக் டமளரை, "கசக்கி",வீசுபவன்,,,,,
மனைவியை கற்ப்பழிப்பான்!
இன்னொரு பெயர்
எல்லா காதலையும்
எல்லா மெளனங்களையும்
எல்லா தனிமைகளையும்
உடைத்து விட்டு
நிலாவாக இருக்கும்
" நிலா"வை
என்ன சொல்ல???
நிலா!
பிணக்கு
கோபுரத்திலிருந்து
ஒரு சேர பறக்கும்
ஆயிரம் புறாக்களின்
சிறகடிப்பு சப்தமாய்,
உன் மெனங்களிலிருந்து
பேரிரைச்சல் கிளம்புகிரது!
உலகையும் ,வாழ்வையும்
சபித்துவிட்டு
அமைதியாகிராய்,
பிரகாரத்திற்க்கு வெளியே கிடக்கும்
ஊனமுற்ற தூணை ப்போல!,
உதாசீனபடுத்தப்பட்ட குழந்தையின்
பெருங்குரல் அழுகையை
ஆறுதல் படுத்த நெருங்கயில்,
ஏதோ ஒரு கோபத்தை படரவிட்டு,
தேம்பி தேம்பி அழுது
"டூ" விட்டு
"நீயெனக்கு சேர்த்தியில்லையென்று"
தனிமைக்குள் புகுந்துகொள்கிராய்!
குழந்தையை வாரி அணைக்கலாம் ,
உன்னை என்ன செய்ய???
Wednesday, 26 December 2012
"மிக சிறந்த……………
"மிக சிறந்தவள் நீ"
உன்னிடமிருக்கும் மிக சிறந்ததில்
நான் தந்ததாய் ஏதுமில்லை.
மிக சிறந்தவள் நீ,
நீ எதிர்பார்க்கும் மிக சிறந்ததில்
என்னிடமிருப்பது ஏதுமில்லை!
எதிரெதிர் பயணிகள் நாம்,
மறந்து விட்டாயா???
மிக சிறந்த பாதை உனது,
மிக சிறந்த லட்சியம் உனது!
கதைகள் பேசி ஓய்வெடுத்தோம்,
பகிர்ந்துண்டோம்,
உறங்கினோம்.
விடிந்து விட்டது அன்பானவளே,
பயணம் தொடர்,
கண்டடை!
நெடு நாட்கள் கழித்து,
உன் "மிக சிறந்தவற்றின் "பட்டியலில்
என்னை இணை,
நீ சந்தித்த "மிக சிறந்த"
முட்டள் வழிபோக்கனாக!
வேண்டி கொள்கிறேன்
"ஏ,காலமே,
என் நினைவுகளால் ,அவளை நோகடிக்காதே, எப்போதும்!
மறந்து போவதின் மருந்து தடவு, இப்போதே!
***
சொல்ல ஏதும் மீதமிருந்தால் ,
நிலவிடமோ, விண்மீனிடமோ,
மழையிடமோ
சொல்லியனுப்பு!
இது தான் முகவரி,
வானம் பார்த்து கிடப்பவன்,
கோபத்தை வீசி, அழுகை பிடுங்குபவன்,
புன்னகை பெற்று கவிதை கொட்டுபவன்.
பி கு: முத்த ஒப்பம் அவசியம்!
Tuesday, 25 December 2012
ஒரு ஓவியம் வரை;
கறுப்பு உடையில்
கண்ணீர் பரிசளிக்களிக்கும்
தேவதையின் ஓவியம்.
அவள் பற்களில்
ரத்த சிவப்பு கலந்து வரை.,
மறந்து விடாதே,
அவள் தேவதை,
அழகாக வரை!
முரண்கள் ,உன் துரிகைக்கு புதிதென்றால்,
கதை எழுது!
அபத்தமாய் ,ஒரு காதல் கதை.
"முட்டாளின் காதல்" என்று
தலைப்பு வை!
சிரிக்காதே!
என் தேவதை!
நான் கேட்ட வரம் !
என் காதல் !
என் வாழ்க்கை!
மேலும் சிரிக்காதே,
உன் உலகம் அழியாததில் ,மகிழ்ச்சி.
என் வீடு இடிந்ததில் ,புலம்பல்!
விட்டு விலகி போ ,
நான் பைத்தியம்!
சிரிப்பும் , அழுகையும், புலம்பலும் சகஜம்!
Monday, 24 December 2012
ஆனந்தியில்லா உலகு
ஆனந்தவர்ஷினி
"போ" "போ" என்றதும்,
கிளம்புகிறது பேருந்து.
இருசக்கர வாகனம்,
தும்பி ,
தாத்தா பாட்டி,
விமானம்,
அணில்,
யாரையும்……எதையும் ,
விடுவதாக இல்லை
"டாட்டாக்காரி"!
அவளின் கையசைப்புக்காக
வீட்டையே சுற்றி சுற்றி வந்து ,
பார்வையில் கூட படாத
பருந்து,
ஏதேனும் உச்சி கிளையில்
உறங்காமலிருக்கலாம்,
வானம் பார்த்தபடி!
யாதும் நீ!
தனிமை வலி ,உள்ளம் குடைய,
விலகி நடக்கிறேன். நாம் ,அருகருகே அமர்ந்து பேசிய,
ஆலமர திண்டை விட்டு.
கண்முன் விரிகிறது,
பேசி,நடந்த ஒற்றையடி பாதை !
தூரத்தில் கேட்குதே,ஒரு சிரிப்பு சத்தம்!
பெண்ணே, அது உன்னுடையதா????
எருமை
ஸ்பரிசங்களின் மீதான,
சுதந்திரம் பற்றிய ஊடலில்
கோபம் கொண்டிருந்தேன்,
ஆதங்கமும்
அவமானமும்
கோபமும்
அழுகையும் முட்ட
தீர்க்கமாய் பார்த்து,
"என்ன வேணாணுணாலும் செஞ்சுக்கோ " என்று
கொஞ்சம் நெருங்கி வந்தமர்ந்தாள்.
திருட்டு "தம்"முக்கு ஆசைபடும் "கொஞ்சம் வளர்ந்த பெரியபையன்"
அம்மாவிடம் அகப்பட்டு தவிப்பதுபோல்
தலை கவிழ்ந்து நிற்கிரேன்………………
இறுக்கியணைத்து
நெற்றி முத்தமிட்டு
"டேய், எரும, நான் உன்னோடது" என்கயில்
எதற்க்காக வந்ததோ?
எனக்கந்த கண்ணீர்!
*வார்த்தைகளால் ஒரு வீடு*
உன் முத்த கவிதைகளெல்லாம் ,
ஒரு பூனைகுட்டியாகி,
"மியாவ்"
"உர்ர்ர்ர்ர்"
"கிர்ர்ர்ர்"
முகபாவனை காட்டி ,
பிரண்டி,
கடித்து
விளையாட்டு சண்டைக்கிழுக்கும்,
சிறுவன் ,
அவன் லாரி பொம்மையை வைத்து,
தனியே விளையாடுவதை
ஒத்ததாக இருக்கும் ,
நீயில்லாத கவிதைகள்!
நீயும் நானுமில்லாத மற்றகவிதைகளோ,
மரச்சாமான்கள்!
Monday, 17 December 2012
விஸ்கியும் வெங்காயமும்!
ஒரு புட்டி "கோனியக்" விஸ்கியும் ,
ஒரு பாக்கெட் "555" சிகரெட்டும்
எடுத்து வருகிறாள் சுசீலா,
நாற்காலியில் சாய்ந்திருக்கும்
நகுலனின் ,தனிமை திறந்து!
கிணற்றடியில் பேச்சுத்துணை,
அடுப்படியில் வெங்காயம் நறுக்க,
ஏதோ ஒரு சுசீலாவுக்கு,
ஏதோ ஒரு நகுலன்!
நகுலனுக்கும் சுசீலாவுக்கும் காதல்!
காதல் .........
காதல் வாழ்வின் சாபக்கேடு!
*சூப்பர் ஹீரோ*
எரிகல்லின் ஒளிகீற்றாய்,
புன்னகை தந்து,
"அலேக்காய்" என்னை தூக்கி
வானம் பறந்து,
நான்கு பேர் பார்க்க,
என் வெட்கம் தின்கிறான்,
"கருமீ" கத்தி கண்ணடிக்கும் ,
கிராதகப்பயல்!
அடிமை குதிரைகள்
விரட்டாதே!
மெதுவாகவேபோ!
தன்னால் தான் வண்டியோடுது என்று
தெரியாதவரைக்கும் தான்
நீ ராஜா,
உன் பயணத்தில் இனிமை!
Wednesday, 12 December 2012
மாலகோவில்
பலூண்களின் வண்ணமும் வடிவமும்
கவர்ந்திழுக்க,
ராட்டின சவாரி வேடிக்கை பார்த்து,
ஜவ்வுமிட்டாய் வாசனையில்
எச்சில் ஊறி,
இரண்டு ரூபாய் குச்சி ஐஸ் மட்டுமாகி,
தேம்பலில் கரைந்தபடி
சில,மாலகோவில் !
வண்ண வண்ண கனவுகளை
விரல்களில் கட்டி,
காதல் ராட்டினத்தில்
ஏற்றி,இறக்கி,
ஜவ்வு மிட்டாய் நினைவுகளை
கை நிறைத்து,
புன்னகை பரிசளித்து கடக்கிறாள் என்னவள்; ஒரு மகிழ்ச்சியான மாலகோவில்!
கடைசிபெட்டிக்கு "டாட்டா"காட்டும்
சிறுவனின் சடுதியில்,
முடிந்தளவு முத்தம் கொட்டி
விடைகொடுக்கிறேன்,
இயல்பை நொந்தபடி!
இன்னொரு ரயில் வரும்,
இன்னொரு திருவிழாவும்!
விழாவற்ற நாட்களில் ,
தனிமை காயும்,
மனமென்னும் மாலகோவில்; மாதேஸ்வரன் துணை!
Tuesday, 11 December 2012
தாத்தா பூச்சி
தனிமையில் நடுங்கியபடி
உன்னை போர்த்திக்கொள்கிறேன்
காய்ச்சல்கார இரவுகள்.
***
இருவரின் நெருக்கங்களில், கோரைபல் காட்டும்
இரு தனிமைகள்.
***
பாதையை கடக்கிறது ,
ரயில் பூச்சி
வாகனங்கள் வராதிருக்கட்டும்.
***
கடைசி சொட்டையும் பருகி,
பெருமூச்சோடு கோப்பை வைத்த பெரியவர்,
எந்த நினைப்பை , உறுஞ்சியிருப்பார்???
***
வெட்டப்பட்ட மரம்
சிதறிப்போன கூடு
உடைந்த முட்டைகள்,
இரைகொத்தி திரும்பிய தாய்குருவி,
இரவெல்லாம் ஓலமிடும்,
யாருக்கு கேக்கும்???
***
காதலின் இரவுகள்
தனிமையின் மெளனங்கள்
தேநீர் கோப்பையின் விளிம்பு
அடர்காட்டின் அமைதி
அருவியின் இரைச்சல்
குப்பை பொறுக்கும் பால்யம்
பசித்து கைநீட்டும் முகம்
***
எங்கோ தொடங்கி
எங்கோ முடியும்
ஏதோ ஒரு கவிதை
***
சிக்கி
திணறி
அலைக்கழிந்து
கொண்டாட்டமாய் மேலேறி
கீழிறங்கி
உருண்டோடி
விழுந்து ,
காற்றோடு பாடிச்செல்லும் ,
வெள்ளெருக்கின் விதையொன்று…………
பாதைகளற்ற, நம்மைப்போல!
Monday, 10 December 2012
"வைக்கட்டுமா?" "ம்ம்"!
தலையாட்டிப்பூக்களின்
தலயை துண்டித்த
பாவம்,
அலைபேசியில்
நம் பேச்சை,நாமே துண்டிக்கும்
நரகம் !
உன்னிடம் திருடியவை!
"எனக்கு நிறைய பிராப்ளம்ஸ் இருக்குடா, தெரியும்தானே? நாம பிரிஞ்சிடலாம் அதான் ரெண்டு பேருக்கும் நல்லது"!
"ஏண்டீ, காலைல கண்ணு முழிக்கும்போதே, இண்ணிக்கு இவன, எப்பிடி வாட்டலாம் னு யோசிச்சுதான் முழிப்பியோ? எங்கியோ போ, என்னமோ பண்ணித்தொல சனியனே, ஆளவிடு"!
எரும மாடு பரதேசி பன்னி பிசாசு கழுத வேற யாரையாச்சும் கரெக்ட் பண்ணிட்டியா இவ்ளோ அசால்ட்டா போக சொல்ற??? போகல னாக்கூட கழுத்த புடிச்சு தள்ளிடுவ போலருக்கே!!! :-@
:-* :-* :-*
மெளனங்கள் விழுங்கிய
இரவின் விடியலில்
மழைச்சத்தம்
*பிரிதலுக்கு பின்*
முதுகுதண்டு வழி உச்சியேரிய ,
முத்த சிலிர்ப்பு நினைவுகள் ,
ரத்தம் உறைக்கும்!
உன் மூச்சின் சூடுபட்ட மேனியெங்கும் ,
எரியும்!
உனக்கு பிடித்த சாம்பார் வாசனை,
நீ செல்லம் கொஞ்சி கடித்த ,இடக்கழுத்து,
பிடித்திழுத்த புடவை நுனி,
விரல் கோதி ஒதுக்கிவிடும் ,
என் அடங்கா சுருள்முடி…………
என்ன சொல்ல???
என்னவனே,
காதலின் பற்களின் கூர்மை ,
மிக,மிக அதிகம்!
Friday, 7 December 2012
அவள்
என் அஞ்சரைப்பெட்டி கவிதைகளையும்,
உன் பெருமை பேசி கொட்டமடிக்கும்
காதலையும்,
உணராத ,உனக்குள்
முடங்கி போனேன்!
தவிப்பு
வீட்டிலேயே விளையாடச்சொல்லி ,
ஒரு ரூபாய் நாணயம் திணித்து,
உடைமாற்றி, வெளிக்கிளம்பும் தாயாக ,
தனியே, தவிக்க விட்டு போவாயோ
என்ற பயத்தில்,
உன் காலை கட்டிக்கொண்டிருக்குது,
என் காதல்!
Thursday, 6 December 2012
கவிதாஞ்சலி
குலை பாரத்தில் சரியும் வாழையாக ,
உனக்கான கவிதைகள்
சுமந்து சரிகிறேன் .
உயிர் போன செய்தியறிந்தால்
எனக்காய் ,
ஒரு கவிதையெழுது!
உன் காதல் கிடைக்காத ,எனக்கு,
ஒரு கவிதையேனும் கிடைக்கட்டும்!
இறந்த கர்ப்பிணி, நினைவாய் வைக்கும் ,
சுமைதாங்கி கல்லை போல,
எனக்காய் ஒரு கவிதை!
Wednesday, 5 December 2012
கவிதை கிறுக்கன்
வார்த்தை குப்பைகள் கிளறி
கவிதை பருக்கை கொத்தும்
என் பேனா பக்கங்களில் ,
அவள் பார்க்க, தெரிவதென்னமோ,
"கோழி கிறுக்கல்கள் "!
பூமரம்
நனைந்த பூ மரம் காற்றாட ,
இலை துள்ளி ,
சிறு மழை சிலிர்ப்பிக்கும்.
எனக்கான ,உன் வெட்கம் அவ்விதமே!
*புனல்*
சுள்ளி காட்டில்
சருகு சத்தம்,
நாகங்கள் பினைந்து பொங்கி
வானம் தொடும்
தரை விழும்,
புழுதி குருவிகள்
கீச்சிட்டு பறக்கும் ,
எலி ,வாளைக்குள் பதுங்கும்.
இணையை புணர்ந்து
பட்டாம் பூச்சி பறக்க
எங்கோ ,தோன்றி மறையும்
ஒரு வானவில்,
எதோ ஒரு செடியில் கிளர்க்கும்
பச்சை கொழுந்து .
நம்முடைய இரவுகளின்
சாட்சி எது???
நாணல் அசைவதா?
ஆம்பல் பரவுவதா?
ஆற்றின் சலசலப்பா?
ஆற்றிக்குள் அமிழ்ந்த
வெள்ளாரங்கற்களின்
மோன நிலையா?
நம் வீட்டு
கூரை ஓடுகளின்
பேரிணைப்பா?
எது எப்படியோ,
என்னவள் நீ
உன்னவன் நான்
புணர்ச்சி உலகம்!
புணர்ந்துகொண்டேயிருப்போம்
ஊழிக்காலம் ,வெகு தொலைவு,
மரணமோ, மிக அருகே!
*சாலை*
ஒதுங்கி வழிவிடும்
லாரிக்கு நன்றியாய்
ஒரு "கீக்,கீ"!
நன்றிக்கு
மறுமொழியாய்
ஒரு "பீப்ப்பீ".
நமது பயணம்
இனிமையாய் கழியட்டும்
நண்பா!
Saturday, 1 December 2012
காதல் காலம்
கண்கள் இறுக மூடி,
தலையணைக்குள் முகம் புதைது,
குப்புறக் கிடக்கும்
கார்காலம்.
போர்வையை இழுத்திறக்கி,
முகத்தை நெம்பி திருகி
மீண்டும் மீண்டும் பெய்திறங்கும்,
நுணிக்கூந்தல் பெருமழை !
ஒன்று
பூஜ்யத்திற்க்கும்
ரெண்டிற்க்குமிடையே,
ஒரு ஒன்று!
வெறும் , ஒன்று!
"ஏன் ?"என்ற கேள்விக்கு
மதிப்பில்லை .
ஒன்றாக மட்டும் இருப்பது
ஒன்றின் இயல்பு !