Wednesday, 26 December 2012

"மிக சிறந்த……………

"மிக சிறந்தவள் நீ"
உன்னிடமிருக்கும் மிக சிறந்ததில்
நான் தந்ததாய் ஏதுமில்லை.
மிக சிறந்தவள் நீ,
நீ எதிர்பார்க்கும் மிக சிறந்ததில்
என்னிடமிருப்பது ஏதுமில்லை!
எதிரெதிர் பயணிகள் நாம்,
மறந்து விட்டாயா???

மிக சிறந்த பாதை உனது,
மிக சிறந்த லட்சியம் உனது!
கதைகள் பேசி ஓய்வெடுத்தோம்,
பகிர்ந்துண்டோம்,
உறங்கினோம்.
விடிந்து விட்டது அன்பானவளே,
பயணம் தொடர்,
கண்டடை!
நெடு நாட்கள் கழித்து,
உன் "மிக சிறந்தவற்றின் "பட்டியலில்
என்னை இணை,
நீ சந்தித்த "மிக சிறந்த"
முட்டள் வழிபோக்கனாக!
வேண்டி கொள்கிறேன்
"ஏ,காலமே,
என் நினைவுகளால் ,அவளை நோகடிக்காதே, எப்போதும்!
மறந்து போவதின் மருந்து தடவு, இப்போதே!

*** 

சொல்ல ஏதும் மீதமிருந்தால் ,
நிலவிடமோ, விண்மீனிடமோ,
மழையிடமோ
சொல்லியனுப்பு!

இது தான் முகவரி,

வானம் பார்த்து கிடப்பவன்,
கோபத்தை வீசி, அழுகை பிடுங்குபவன்,
புன்னகை பெற்று கவிதை கொட்டுபவன்.

பி கு: முத்த ஒப்பம் அவசியம்!


No comments:

Post a Comment