Wednesday, 5 December 2012

*புனல்*





சுள்ளி காட்டில்
சருகு சத்தம்,
நாகங்கள் பினைந்து பொங்கி
வானம் தொடும்
தரை விழும்,
புழுதி குருவிகள்
கீச்சிட்டு பறக்கும் ,
எலி ,வாளைக்குள் பதுங்கும்.
இணையை புணர்ந்து
பட்டாம் பூச்சி பறக்க 
எங்கோ ,தோன்றி மறையும்
ஒரு வானவில்,
எதோ ஒரு செடியில் கிளர்க்கும்
பச்சை கொழுந்து . 
நம்முடைய இரவுகளின்
சாட்சி எது???
நாணல் அசைவதா?
ஆம்பல் பரவுவதா?
ஆற்றின் சலசலப்பா?
ஆற்றிக்குள் அமிழ்ந்த
வெள்ளாரங்கற்களின்
மோன நிலையா?
நம் வீட்டு
கூரை ஓடுகளின்
பேரிணைப்பா?
எது எப்படியோ,
என்னவள் நீ
உன்னவன் நான்
புணர்ச்சி உலகம்!
புணர்ந்துகொண்டேயிருப்போம்
ஊழிக்காலம் ,வெகு தொலைவு,

மரணமோ, மிக அருகே!


No comments:

Post a Comment