ஜடாமுடியும்
திரி சூலமும்
மூன்றாம் பிறையும்
முக்கண்ணும்
ருத்ராக்ஷமும்
பாம்பும்
தோடும்
உடுக்கையும்,
உமையின் பதி கோபக்காரனை
ஊரறியும்
கங்கையை தழுவும் காதலனை
யாரறிவார்?
Wednesday, 27 February 2013
கைய்யை கிழிக்கும் கள்ளிப்பழம்,
பாதி கடித்து ஓடிய அணில்குஞ்சு
பனித்துளி தாங்கிய தொட்டாவாடி பூ,
தேர்வுமுடிவுகள் வெளியான நாளிதழ்,
கைக்கெட்டும் உயரத்தில்
வேலிக்குள் பழுத்த மாம்பழம்
தென்னையோலை "பீப்பீ"
பனையோலை காத்தாடி
மயிர் முளைத்த கிளிக்குஞ்சு,
கண்திறக்காத பூனைக்குட்டி,
எல்லா சாயலும் உன்னைப்போலிருக்கும் எதுவும்
உன்னைப்போல் இல்லை,
"இப்படித்தானே விழுந்தாய்" என்றபடி ,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்தது
நான்ங்கைந்து துள்ளி
முத்தங்களும்
சண்டைகளும்
கோபங்களுமாக.......
தட்டியெடுத்தது .
எந்த துளியில் நின்றதென ,தெரியவில்லை!
முழுதும் நனைத்து
சொட்டிக்கொண்டிருந்தது மழை,
அன்றுபெய்த மழைக்கு
சாட்சியாய்
ஈர மண்ணில்
சில காலடித்தடங்கள்
!
மீண்டுமொரு மழை
தடயம் அழிக்கும் ,
அல்லது;
வேறெங்கேனும் உருவாக்கும்!
எல்லோருக்காகவும் படித்து,படித்து
அறிவாளி ஆனான்,
எல்லோருக்காகவும் பேசி,பேசி
பேச்சாளானனான்.
எல்லோருக்காகவும் சிந்தித்து சிந்தித்து
சிந்தனாவாதியானான்,
எல்லோருக்காகவும் எழுதி எழுதி
எழுத்தாளனானான்,
பிறிதொரு நாள்,
அறிவாளியும்,
பேச்சாளனும்,
சிந்தனாவாதியும்,
எழுத்தாளனும்,
அரசியல்வாதியும் மரியாதை நிமித்தமாய் சந்தித்து
விருந்து சாப்பிடனர்,
எல்லோருடைய உணவும் தீர்ந்துபோனது!
*ஆதாம் ஏவாள் கதை*
மகளை புணர்ந்தவனுக்கு
மரணதண்டணை கொடுத்திருக்கலாம்,
மகனோடு சல்லாபித்தவளுக்கும்!
பொருந்தா காமங்களெல்லாம் ரசித்துவிட்டு,
மன்னித்து விட்டு விட்டான் மகாபாவி!
கேடு கெட்ட மனித இனம் ,பல்கி பெருகியது!
இறைவனின் கருணையில்
சாத்தானும் பிழைக்கிறான்!
"கருணை காட்டாதீர், ஆண்டவரே"!
ஆமென்!
Monday, 18 February 2013
மொத்த வாழ்வில்
நான் இழந்ததும் சேகரித்ததும்
நீ எனக்காய் சிந்திய
சில துளி கண்ணீரே!
இதயத்தின் வார்த்தைகள் கவிதையென்றால்,
என் இதயம்
உன் பேரைத்தான் கேவுகிறது ,
எல்லா கவிதைகளை விட
உன் பெயர் இனிமை
நான் சந்தித்த உண்மைகளில்
ரணப்படுத்திய உண்மை நீயே!
ஆலையை நெருங்கும்
கரும்பு கட்டு போல
தினம் ,உன் நினைவுகளை நெருங்குது மனம்,
வெல்லத்தின் வாசனையில் மயங்கி
கொதிக்கும் பாவுக்குள் குதித்த
எறும்பின் கதை என்னுடையது,
நான் சந்திக்கும் அடுத்த பெண்
உன்னைப்போல் இருக்ககூடாதென வேண்டுகிறேன்
துரதிர்ஷ்டம்,
எல்லா பொய்களிலும் உன் குரல்
எல்லா ஒப்பனையிலும்
உன் நிழல்,
உன்னுடைய நியாயங்கள் கேட்க மாட்டேன்!
என் கவிதை, எனக்கு சமாதானம்
என் பக்க சார்பு
என் நியாயம்
நான் கேட்கும் பாவமன்னிப்பு .,
"பாத்தியா பாவி, இதுலையும் நீதான் நெறஞ்சிருகே"!
உனக்கு ஒரு பாராட்டு தேவைப்படுகிறது,
நீயென்னை பாராட்ட தொடங்குகிறாய்!
கவனிப்பு தேவைப்படுகையில்,
என்னை கவனிப்பதுப்போல் காட்டிக்கொள்கிறாய்!
ஒரு விமர்சனத்தின் குறையை ,நீ உணர்கயில்
என்னை விமர்சிக்க தொடங்குகிறாய்!
கொடுத்து பெறுதல் வாழ்வின் வழி !
பெறுவதற்காக கொடுப்பது,
என்ன நியதி???
தேவை, ஒரு கவிதை .
புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு
வெறுமனே கடந்து செல்லும் விதம்
ஒரு கவிதை!
கவிதை போன்றதொரு வாழ்வு!
சுபம்!
சிவ சிவ
சிவத்தின் குறியில்
உமையின் யோனி
யார்,எங்கு சேர்வாரோ?
எந்த உலகம் பிறக்குமோ?
எந்த உலகம் இருக்குமோ?
எந்த பூ, பூக்குமோ?
யாருக்குத்தெரியும்?
சிவ சிவ!
தேவி
அவள் உருவம்
காளியைப்போல் மாறிவிட்டது!
ஆயிரம் தலை,
கோரை பற்கள்
குடல்கள் குழலாய்,
கபால மாலை.
திரிபுரம் எரித்த
நெற்றிக்கண் வெப்பமாய்
அவள் பார்வை,
உடல் வெந்து கதறுகிறேன் ,நான் .
புழுவை நசுக்குவதாய்
என் நெஞ்சின்மீது ,கால்கள்.
ரத்தம் வழியும்
திரிசூலம் உயர்த்துகயில்
விழித்துவிட்டேன்,
ஹோ,எல்லாம் ஒரு கனா;
என் காதலை போல!
*இரக்கமனம் கொண்டவன் (ள்) ,ஏமாந்து நின்ற கதை*
உன்னிடம் நெருங்க நெருங்க
மேலும் மேலும்
அவளை உணர்கிறேன்,
என் தவறுகளை,
என் அழுக்குகளை,
என் பயங்களை,
என் அவமானங்களை,
என் இயலாமையை,
அடிமைத்தனத்தை,
குரூரத்தை
என்னை உணர்த்திய அவளுக்கு நன்றி !
நேசித்த உனக்கும்!
அவளின் கண்ணீரும்
உன் கரிசனமும்
ஒன்றே தான்!
எனக்கு ஒரு வடு இருக்கிறது,
உனக்கு வேண்டாமது,
சிறு வலி இது , நாளை மறந்துவிடும்!
உன் கண்ணீர் வீழ்த்திய, என் வாழ்க்கை
நாசமாய் போகட்டும்!
இனி எவளோடும் பேச்சில்லை!
Tuesday, 5 February 2013
ஆனந்தவர்ஷினி
கண்கள் உருட்டி
நாக்கை புறம் நீட்டி வருகிறது
குட்டிபூதம்.
கண்கள் இறுக்கி,
பிஞ்சு பல் இறுக,
தன் மென் விரல்களால்
"பிச்சு" வைக்கிறாள்,
மெதுவாய் விசும்ப தொடங்கையில்,
"ம்மா, அப்பாவெ, பூதா……பிச்சு" என்றபடி
சமையலறைக்கு ஓடுகிறாள்.
எல்லா வீட்டிலும் இருந்திருக்கும்
ஒரு குட்டி பூதம்,
எல்லார் வீட்டிலும் இருக்கக்கூடும்
குட்டியாகவோ,
பெரிதாகவோ
ஒரு தேவதை!
மேகம்
அந்திமாலை நேரம் போல,
நூல் மேல் நடக்கிறாய் நீ
இரு வேறான
உலகங்கள் நடுவே!
உன் முகத்தின் உண்மை பிரகாசம்
என் உலகின் எல்லா இருளையும்
தீர்க்கவல்லது,
உன் பொய்யின் பெருங்குரலோ,
என் மனதின் பள்ளத்தாக்குளில்
அழிக்கமுடியா எதிரொலிகள்!
"வினைக்கு எப்போதும்
எதிர்வினை உண்டு"!
உனக்கும் எனக்கும் !
அனுபவிப்போம்.
மேடையில் , திரை விழ,
ஒப்பனை கலைத்த நடிகர்க்கு,
அன்றாட கவலைகள் பற்றிக்கொள்ள ,
விலகுகிறோம்!
உனக்கு நான் மேடை,
எனக்கு நீயும்.
விலகுதல் இயல்பென ஆனபிறகு
முதல் முடிவை
நீயெடுத்தலென்ன,
நானெடுத்தாலென்ன?
வார்த்தைகளுக்கும், வலிகளுக்கும்
அர்த்தமேயில்லை!
கோபம் நல்லதில்லையாம்,
சில கோபம்
நன்மைக்கு அழைத்து செல்லுதே!
நேசம் நன்மை தருமாம்,
சில நேசம் ஆன்மாவை அழிக்கிறதே,
எது எப்படியோ,
காதலெனும் நாடகத்தில்
இனி நான் நடிப்பதாயில்லை ,
இரட்டை வேடத்தில்.
நவரசங்களின் பாத்திர படைப்பில் இணைந்திருப்பவளே!
உனக்காக ஒரு முறை .........
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!