Sunday, 30 September 2012

adult only

"குட்டி பாப்பா, எப்டீமா பொறக்குது?"

ஆங்……………
"என் உயிர எடுக்கரதே,
அப்பனுக்கும் , பொண்ணுக்கும்,
வேலையா போச்சு"!!!!
ரெண்டுத்துக்கும்
அதே குறுக்கு புத்தி! :-p


பதட்டம்

லாட்டரி
முடிவுக்கு
காத்திருக்கும்
குடிகாரன்!
மகப்பேறு
அறைக்கு
வெளியில்
கணவன்!
இரண்டும் கெட்ட நிலையில் காத்திருக்கிறேன்!
என்னவானதோ,
என்னவளே,உன்
எழுத்து தேர்வு????

Friday, 28 September 2012

wallpaper


மறைத்து வைத்த புத்தகத்துள்,
மயிலிறகு பார்க்கும்
சிறுவன் போல,……
தொடுதிரை கைபேசியை
திறந்து பார்க்கிறேன்!
அன்பு பார்வையும்,
அழகு சிரிப்புமாய்,
குறும்பாய் ,
கண்ணடித்து
கதையொன்று சொல்லும்
என் குட்டி மயிலறகு
நீ!
கன்னம் தடவி,
புன்னகைத்து
சட்டை பையில் ஒளித்து வைக்கிறேன்!
"நெஞ்சுக்குள் குதிக்குதுன்

"முத்த குட்டி"!


ருசி கண்ட பூனை!

தாகமெடுத்த
ரத்தகாட்டேரி போல் ,
பயம்காட்டி
பிடுங்கி விடுவான்
எப்போதுமே!
எப்போதாவது,
நானாக கொடுக்கயில்,
புளிப்பு மிட்டாய்
சாப்பிடும்
சிறுவனாய்
குதூகல முகம் காட்டி
, "இன்னும்"என்கிறான்
!!!
" முத்த பசி "தீராத,
என் செல்ல பிசாசு!


Thursday, 27 September 2012

தாஜ்மஹால்

இனியும் ,
கவிதைகள்
எழுதுவதாய்
இல்லை நான்!
இருவரும் ,
ஒன்றான
தனிமை தருணங்களில்,
தோள் சாய்ந்து,
மார் சாய்ந்து,
மடி சாய்ந்த
கணங்களின்
"கல்லறை தோட்டம் "
என் "பாழாய் போன கவிதைகள்" !
இனியும்
கவிதைகள் எழுதுவதாய்
இல்லை நான்!


Thursday, 20 September 2012

பேஸ்புக்

என் மனம் அழும்,
status சுக்கு,
like போட்டு ரசிக்கும்,
"கொடுமைக்காரி "
அவள்!

நெற்றி பத்திட்டு,
தலை கோதி,
தைலம் தடவி,
கஞ்சி குடிக்க,
கோபம் கொண்டு,  
பாட்டீ
நீ
அருகிலிருக்கும்
காய்ச்சல், 
வரம்!


Wednesday, 19 September 2012

கால் சுற்றுவதும்,
கன்னம் நக்குவதும்,லேசாய் பிரண்டுவதும்,
வேறொன்றும் தெரியவில்லை,
உன் அழுகை போக்க!
"மியாவ்"…………"மியாவ்"!


Tuesday, 18 September 2012

கொடுமைக்காரி

"குண்டூசியால் குத்தி குத்தி கொலை செய்கிறாய்.

உன் கோபப்பார்வைகளும்,
நீ விட்டு சென்ற,
தனிமை தருணங்களும் ,
வேறென்னவாம்???


Monday, 17 September 2012

உறக்கம் திருடும் கொள்ளைக்காரன்!

உறக்கத்தில் சிரிப்பதாக,
அம்மா சொன்னாள்,
கண்ணடிக்கிறான்,
கைபிடிக்கிறான்,
கள்வனவன் கனவுகளை ,
எப்படி விரட்ட???


பாசக்காரி

"கேஸ் முடிஞ்சிது"!
"பருப்பு தீந்துது"!
"முட்டை இல்லே"!

நெஞ்சழுத்தக்காரி,
காலையிலிருந்து,
ஒரு வார்த்த பேசல,

"ஏன்டி, என்னடி ஊம்பிரச்சினெ???"

"அந்த வயலட் சாரிக்கு மேட்ச்சா ஆ ஆ……………"

"அய்யயோ, நீ என்னமோ பண்ணு"

"நா வேனுன்னா,
கடைக்கு போயி,
ரெண்டு முட்டெ
வாங்கீட்டு வரட்டுமா?" 

சுபம்!


Wednesday, 12 September 2012

நிலை!


வாகனங்கள் கடக்கும் ,
பாலத்தின் நடுக்கம்.
கசக்கி எறிந்த காகிதத்தில் ,
நான்கு வரி கவிதை.
புதைகுழியில் சிக்கிகொண்ட,
வாயில்லா ஜீவன்.
நீ விலகிசென்ற தடம் பார்த்து………………
அலையாய் தவமிருக்கும் ,
கடல்!


Tuesday, 11 September 2012

மக்கு பயல்

கார்பன் பேப்பரில்,
நிலா வரைந்து ,
"இரவென்று" சொன்ன
"சிவ சித்தார்த்தன்"
என் மகன்,
கணக்கில் "வீக்"காம்,
மிஸ் சொன்னாள்!

"குட்டிதம்பி கேட்ட,
பொம்மை வரைந்து கொடுத்தேன்,
"இத்துணூண்டு ,சிரிப்பது போல்"
அது நீதான்,
சிடுமூஞ்சி!
"கொஞ்சூண்டு சிரியேண்டா"!


என் ரசிகை

"எப்பிடிடா இப்படி கவிதெ எழுதரே?
எங்கிருந்து கெடைக்குது இதெல்லா???"

"ஊங்கிட்டிருந்து தான்"

"போடா, பொய் சொல்லாத!"

      **** 
" என் கவிதெயெல்லாம் எப்பிடிருக்கு?"

"குட்டி,குட்டியா ஆட்டு புளுக்க போல அழகா இருக்கு!"

என் கவிதை ஊற்று அவளை தவிற வேறு யாராக இருக்கக்கூடும்!!"""


Sunday, 9 September 2012

பாக பிரிவினை

"பிசாசு" எனக்கானது,
"எருமெ" அவளுக்கானது,
"உம்மா" பொதுவானது!!!


"அவன் படுக்கையறை முழுக்க,
என் கவிதைகள் கலைந்து கிடக்கிறது"


உலக அழகி!!!!


ஒரு குருட்டு தைரியம் தான்;
எல்லா பெண்களையும் போல,
அவளையும், கடந்து விடலாமென்று!
" காணாமல் போனவர்கள் "
பட்டியலில்
"எம் பேரு எத்தனாவது?"


விளிம்பு

பிணமாக்கி எரிக்குதடா என்னை,
உன் மீதான காதல்,
உயிர்வார்த்தை சொல்லிவிட,
எத்தனிக்கிறேன்,
"வெட்டியானின் மூங்கில் தடியாய்"
அலட்சிய புன்னகை!


Saturday, 8 September 2012

*நாத்திகன்*

கண்ணன் என்ன பெரிய "புடுங்கியா"???

ஆண்டாள் எப்படியோ போகட்டும்,
நீ ஏனடி பாடி தொலைக்கிறாய்???

Friday, 7 September 2012

"இதோ, எந்தன் தெய்வம் முன்னாலே"
பாடி சென்றது,
மாற்று திறனாளிகள், இன்னிசை குழு,
மனிதனாகக்கூட  இல்லை
நான்!


உலகமகா பொறுமைசாலி -என் கண்ணகி!

நீ, "மூஞ்சியை தூக்கி வைத்திருக்கும்"
அழகுக்காக,
முப்பது கவிதை சொல்லலாம்!
தலைமுடி பிடித்திழுத்து,
புஜம் கடித்து,
முதுகில்
குத்தோ,குத்தென்று
குத்தி தீர்த்து,
தலையணை சண்டைக்கிழுப்பாயே;
ராட்சசி!

"ஆள விடு சாமி!, கவிதைன்னா என்ன?"


Wednesday, 5 September 2012

துர்மரணம்

தகமெடுக்கும்;
குடிக்கமுடியாது,
கள்ளுபான தட்டிவிடும்!
பசியெடுக்கும்;
திங்கமுடியாது!
கறிசோர கொட்டிவிடும்!
பொண்டு புள்ளைகள
பொடணீல அடிக்கும், 
வாய்க்கா பக்கம் ,
வண்டிமாடு சண்டி பண்ணும்,
வரப்பு பக்கம் வா ,வா னு  கத்திகிட்டோடும்,
ஊருக்கு தெரியாதில்லே,
கதிரேசன் செத்த கதே
மீனாட்சி பெத்த கதெ!

தெரியுமா, உனக்கு?




நீ
எனக்காய் ,
விட்டு சென்ற நிலவுக்கு,
தேய்பிறை!

Monday, 3 September 2012

தலை சீவி விட்டு,
சட்டை பொத்தான் இட்டு,
சாதம் ஊட்டி,
நெற்றி முத்தம் இட்டு
அவனை "ஆபீஸ்" கிளப்பி விடுவதற்க்குள்
"ஒரு வழியாகிறேன்"!!!
"பல் தேய்க்காமல் ,
முத்தம் தர வரும்
சோம்பல் பொறுக்கி"!


Sunday, 2 September 2012

மழையானவள்




ஒதுங்கிய கூரையின்
உள் நுழைந்து,
இண்டு இடுக்கு வழி
பயணம் செய்து,
எதிர்பாரததொரு தருணத்தில்,
என் தலை குட்டி
சிரித்ததொரு
பெருமழை!


ஓவ்வொரு கேள்வியின் பின்னும்,
ஒரு மெளனம்!
ஒவ்வொரு மெளனத்தின் பின்னும்
ஒரு கேள்வி!
நீ கேட்காத கேள்விக்காகவும்,
நான் உணராத மெளனத்திற்க்காகவும்,
மிக பெரும் தண்டனை,
இந்த வாழ்க்கை!!!

Saturday, 1 September 2012

குருக்ஷேத்ரம்

            

பதிநெட்டாம் நாள்,
அமைதி திரும்பியது.
கெளரவர்கள் அழிந்தனர்,
பாண்டவர்கள் அழிந்தனர்,
"அமைதிக்கான அணுகுண்டு"
வைத்திருந்த
கண்ணனும் அழிந்தான்!
புல்லும் இல்லை,
புள்ளும் இல்லை,
அமைதி திரும்பியது ………
……
………
… பேரமைதி!


*தப்பித்தல்*


முகவரி மாற்றி சென்று  விட்டாள்,
தன் முகம் தொலைத்தவள்,
புதிய முகம்,
புதிய முகவரி,
வேறென்ன??? எப்போதும் போல,
மீண்டும் தொலைப்பாள்!