Saturday, 25 April 2015
கொல்லுதல் யார்க்கும் எளிய.......அரியவாம்.....
"உன்னெ காதலிச்சு காதலிச்சு கொல்லுவேன்"
ஓ அப்டியா! பின்னெ?
"முத்தம் குடுத்து முத்தம் குடுத்து கொல்லுவேன்"
சரி!பின்னெ?
ம்ம்ம்ம்.........கட்டிபுடிச்சி.....கடிச்சுவச்சு..........
டேய் டேய் டேய் .....போதும் போதும்! உன்ன மிதிச்சே கொல்லுவேன்.
திருவிழா
ஒரு மூச்சுக்கும்
மறு மூச்சுக்குமிடையே
ஒற்றை கணத்தில்
நெஞசம் நிறைக்கும்
குழந்தை சிரிப்பு நீ.
திருவிழா
பிரதோஷம்
கிருத்திகை
ஆவணி மூலம்
தைப்பூசம்
பொங்கல்
தீபாவளி
ஹோலி
ஓணம்
சித்திரை கணி
பட்டீஸ்வரன் பச்சைநாயகி திருகல்யாணம்
இவைகளோடு
நாம் முத்தமிட்டுக்கொண்ட
நேற்றைய நாளையும்
ஒரு திருவிழாவாய்
கொண்டாட சொல்லி கொடுப்பேன்
நம் பிள்ளைக்கு.
என் மழையும் உன் மழையும்
mஇரு மழை
****
யாருமற்ற ஏதோ ஓரிடத்தில்
மலையோர பெருநதியில்
விழும் துளிகளை போல
காதலியை பிரிந்திருக்கும் காதலனின் சோகம் சொல்கிறது
நீயருகில்லா இம்மழை.
********
கடிக்கிறேன்
அடிக்கிறேன்
சிரிக்கிறேன்
கண்கள் மூடி முத்தமிடுகிறேன்
நீயருகே இல்லாத இந்த மழையில்
துள்ளி குதித்து நனைகிறேன்
பொறுக்கி பைய்ய்ய்ய்ய்யா
துளி துளியாய் முத்தமிட்டு
என்னை முழுதாய் நனைத்தவனே....
டேய்............உம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ.
கூஊஊஊஊஊஊ......ச்சுக் ச்சுக் ச்சுக்
ஒரு பெட்டி நிறைய விண்மீன்கள்
ஒரு பெட்டி நிறைய பூக்கள்
ஒரு பெட்டி நிறைய கவிதைகள்
ஒரு பெட்டி நிறைய முத்தங்கள்
இப்படி
உலகின் அழகானவை அனைத்தையும்
உனக்காக சுமந்தபடி
உன்னையே சுற்றிவரும்
"சரக்கு"ரயில் நான்.
அடி எருமே..... அந்த என்னைப்போய்
"சரக்கடிக்காதே" என்கிறாயே, நியாயமா?
வயிற்றெரிச்சல்
vநான் தந்ததாக இருந்தால் தான்
என்னவாம்
அந்த கரடி பொம்மையைக்கூட
காதலோடு பார்க்காதேடி.... கோணவாச்சீ
நடனம்
கைகளை காற்றில் உயர்த்தி
பொய் கோபம் காட்டி முறைத்து
என் கேலிகளால் வெட்கத்தில் கன்னம் சிவந்து
உன் தோழியிடம் அதட்டல் பேசி
உன் மூக்கின் நுனியில் வந்ததே அன்றொரு கோபம்.....
அந்த கோபத்தை கண்டு
என் காதலுக்கு வெட்கம் வந்ததடி வாயாடிப்பாறூ
உன் ஜிமிக்கி துள்ளி குதித்து சிரித்ததே...... கவனித்தாயா??
மலர்தல்
aஇரவு நேர சம்பாஷனைகளில்
இல்ல...முடியாது....மாட்டேனென்று
சிணுங்குகிறாய்
இன்னும் கண்கள் திறக்காத பூனைகுட்டி போல.
வாரியெடுத்து தடவி
தலைகோதி
மார்போடணைத்து
முகத்தோடு முகம் சேர்க்கிறேன்
முழுதாய் மலர்ந்த ஒரு சூரியந்தி ஆகிறாய்.
ஆகவே அன்பே.........
உன்னை பற்றி யாரும் கேட்டால் கூசாமல் கோடி பொய் சொல்வேன் வார்த்தைகள் வழியாய் கூட
என்னுள்ளிருந்து உனை
போகாமல் பார்த்துக்கொள்வேன்
ஆகவே........
***
என் கைகளால் உன் கன்னம் எடுத்து மூக்கோடு மூக்குரசி கோடி முத்தமிடுவேன்
ஆகவே........
***
உன்னை சிறு பொம்மையாக்கி மாரோடு சேர்த்து கொள்வேன்
ஆகவே........
***
காலமெல்லாம் நீ பேச அதை நான் ரசித்திருப்பேன்
போர்வைக்குள் கேட்கும் மழை சத்தம் போல
ஆகவே........
***
கோவித்து திரும்பி படுக்கும் இரவில் காதோரம் பாடல் படிப்பேன்
ஆகவே........
***
எப்போதேனும் அழுவாயென்றால் நெஞ்சோடு சேர்த்து உச்சியில் முத்தமிடுவேன்
ஆகவே........
***
நீ ரசிக்கும் பாடலுக்கு சாய்ந்து கேட்க தோள் தருவேன்
ஆகவே........
***
கள்ளம் செய்து மாட்டினாலும் கண்ணடித்து தப்பிப்பேன்
ஆகவே........
***
பிடித்த புத்தகம் வாங்கி தருவேன் ,முதுகில் சாய்ந்து படி
ஆகவே........
***
உனக்கு பிடித்த இடத்தில் கண் பார்த்து காதல் சொல்வேன் ,ஆகவே........
உலகில் எனக்கு பிடித்த இடம் உன் கண்களெண்பேன்
ஆகவே........
***
பிரியமானவளே, இந்த ஜென்மத்தில் என்னை விட அதிகமாக
உன்னை யாரும் நேசிக்க முடியாது, உன்னால் கூட. ஆகவே..........
கடைசி உறக்கம்
இப்போது சொல்லமாட்டேன்
உன்னை எத்தனை பிடிக்குமென்று
புன்னகையோடு கண்கள் மூடி கிடப்பேன் ஒரு நாள்.....
என்னுள்ளே நீ சிரித்துக்கொண்டிருக்கலாம்.
என் வீட்டு மாமரத்தின் கீச்சுக்குருவிகள்
தூரத்தில் மின்னும் ஒற்றை நட்ச்சத்திரம்
தாவணி சீருடை மாணவிகள்
ஓயாது பேசும் எப் எம் தொகுப்பாளினி
தந்தை தோளுறங்கும் குட்டி பாப்பா
காதலனை இறுக்கியமர்ந்த பைக் யுவதி
மகனை கைபிடித்து அழைத்து செல்லும் இளந்தாய்
இவைகளும் இவர்களும்
எனக்கு உன் தோற்றம் தருதடி
"வாயாடிப்பாறு".........
உன் வீட்டு ஜன்னலோரம்
கண்ணாடி குடுவைக்குள்
ஓடி பிடித்து விளையாடும்
ஜோடி மீன்களை பார்க்கையில்
அன்பே என்னை நினைப்பாயா?
சொன்னார்களே
மணியடிக்கும்
மழைவரும்
வசந்தம் பூக்கும் என்றெல்லாம்
உன் மீதான காதலில் அப்படியொன்றும் பெரிதாயில்லையே.....
அதைக்கூட ஏற்று கொள்வேன்
ஆனால்
நேற்றுவரை பேரழகியாக வலம் வந்த
காஜல் அகர்வாலை
என் காஜூ செல்லத்தை
குண்டாக்கி விட்டாயேடி
அய்யோ இனி நான் என்ன செய்வேன்
உன் டுபாக்கூர் காதலை மன்னிக்கவே மாட்டேன்
கவிதை இல்லாத எழுதாத நாட்கள் காற்றில்லாத கோடை மதியத்தில் தன் நண்பர்களை இழந்து விட்டு தனித்திருக்கும் முதியவரின் முகம் போல வெறுமையாய் கிடக்கிறது .... அதனால் எப்போதும் போலவே ஏதேனும் அவ்வப்போது கிறுக்கி பதிவிடுவேன்,………… எல்லோரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க,…………அது நம்மை நோக்கித்தான் வருது என்று கூவி எச்சரிக்கிறேன். :-) நன்றி
Subscribe to:
Posts (Atom)