வெளியிலெங்கும் வேடம் பூண்டு
பல்லிளித்து பேசி நடித்து
சிலநேரம்
கோரமாய் அடிபட்டு ,
அவமானப்படுத்தப்பட்ட
வெறிகொண்ட மிருகம்
இரவில் உன் மீது பாயலாம்
மன்னித்துவிடு பெண்ணே
அல்லது
உந்தன் மடியில் சாகலாம்
அணைத்துக்கொள் பெண்ணே.
Saturday, 17 August 2013
போக்கிடம்
பழங்கதை
அதொரு காலம்
ஆண் குழந்தையோ,
பெண் குழந்தையோ
யார் குழந்தையோ
ஆசையாய் தூக்கலாம்
செல்லமாய் கொஞ்சலாம்
அன்பொழுக முத்தமிடலாம்
ம்ம்,அதொருகாலம்
அந்தக்காலம்!
ராஜா
அவனுக்கென்ன;
கொடுத்து வைத்தவன்!
ராஜவாழ்க்கை வாய்த்திருக்கிறது
ராஜாவுக்கும் ,கவலையுண்டு
மூப்புண்டு
பிணியுண்டு
மரணமுண்டு
ஆனாலும் அது
ராஜவாழ்க்கை
எல்லோர்க்கும் அதன்மேல்
ஒரு வசீகரம்.
தேவை
நெடும் வரிசையில்
கடைசியில்
அவர் நின்றிருந்தார்
"அடடே கடவுள்"
ஒரு சிறப்பு அனுமதி சீட்டு வாங்கி
மாற்று பாதையில் வரச்சொன்னேன்,
கொஞ்சம் சோறு
புணர்ச்சி போகம்
மூன்றாவதாய் அவர் வந்தார்
இன்னொரு நாள் சந்திப்போமென
விடைகொடுத்தேன்.
கருணை
இந்த பாதை
அந்த இருளினுள்
நுழைந்து
மறைகிறது
அடுத்த காலடிக்கான
வெளிச்சம்
இங்கேயிருப்பது பெரும் பாக்கியம்
உன் கருணையோ கருணை.
காரணம்
அழுது அழுது
அழுகை ஒரு பழக்கமாகிவிட்டது
அழ ஒன்றும் இல்லையென்றால்
புதிதாய் ஒன்றை உருவாக்கி ,அழுவோன் நான்
மெளனம்
யாருக்கும் என்னிடம் பதில்களில்லை,
என்னை புரிந்தவர்க்கு
பதில்கள் தேவையில்லை
புரிந்துகொள்ளாதவர்க்கோ
அது உபயோகமற்றது.
வெளிப்படுதல்
கடந்தகாலத்தின் புதைகுழியில்
இடுப்புவரை அமிழ்ந்துவிட்டு
எதிர்காலத்திலெங்கிருந்தோ வந்த கயிர்
கழுத்தை இறுக்க
நிகழ்காலத்தில்
மின்னி மின்னி பறக்கும்
மின்மினி பூச்சிக்கு
இருட்டொன்றும்
பெருங்கொண்ட கொடுமையில்லை.
அபத்தம்
சுதந்திரத்தின் மகிழ்ச்சியை
கொண்டாடும் தருணத்தில்
பிரிவுக்காய் ,
ஒப்பாரியும் வைக்கிறீர்கள்
சுபம்.
ப்பா
இந்த காலமெல்லாம் கொஞ்சினாலும்
தீராது கண்மணி ,
கொஞ்சி கொஞ்சி
திக்கி திக்கி
நீ பேசிய
முதல் "ப்பா"வுக்கான
மகிழ்ச்சியை.
********
சிறகுகளாய் ,
ஆணின் கைகள் இருக்கும் வரை
பெண்கள் எப்போதும்
தேவதைகள் தான்.
இப்போதைக்கு
"எதற்காக போராடுகிறீர்?"
" நியாயம்
சமநீதி
பொதுவுடமை
சுதந்திரம்
மொழி
இனம்
பண்பாடு ,இன்னும் பிற" ,
கொஞ்சம் ,கருணை எதிர்பார்த்து,
உங்கள் காலின் கீழ் கிடக்குதே, ஒரு கூட்டம்
அவர்களுக்காய்
உங்கள் கைவசம் இருப்பது என்ன? -
-
-
-
-
-
"உதை"!
நான்
அன்பும் இல்லை
காதலும் இல்லை
கவிதையும் இல்லை
கருணையும் இல்லை
எப்போதும்,என்னிடமிருப்பது
கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் மட்டுமே . #நான் எப்போதும் நானல்ல
அர்த்xxஹின்ட்ரக் fஹ்ச்ம்ஹ்fஷ்
இந்த கவிதையின்
முதல் வரிக்கு முன்னால்
நான் இருக்கிறேன்
கடைசி வரியில் நீயிருப்பாய்
உன்னை ஸ்பர்சிக்கும்
முத்தமிடும்
அணைக்கும் பேராவல் பொங்க
வளைந்து வளைந்து போகும்
எழுத்துக்களில் வழுக்கி
வரிகளின் கல் படிகளில் விழுந்து
அடிபட்டு
உருண்டு
ரத்தம் சொட்ட சொட்ட
தட்டு தடுமாறி ,
எழுந்து பார்க்கிறேன்
உன்னை காணவில்லை.
மீண்டும் வழி தவறிவிட்டேன்.
சிலநேரம்
வாணவேடிக்கையில் மகிழ்ச்சிப்படுத்தும் பட்டாசுகள்
சில நேரம்
உயிர் பறிப்பதில்லையா?
தவறி விழுந்த தீப்பொறி போல
சில வார்த்தைகள்
சில பார்வைகள்.
பண்டிகை நாட்கள்
அழுகையில் முடியலாம்
சிலபேர்க்கு
குறை
பிடிக்காத வாழ்க்கை வாழும் அனைவருமே
தற்கொலை செய்துகொண்டவர்கள்தாம்
என்ன பெரிய வித்தியாசம்
"உயிர்போகவில்லை" அவ்ளவே
அதொரு பெரிய குறையா என்ன?
உச்சி
வழிகள் பல
சேருமிடம் ஒன்றுதான் . .
.
உச்சியிலிருந்து இறங்குபவருக்கோ,
எத்தனையெத்தனை வழிகள்!!!!!
உன் திசை ஏது?
மாயா
பயணத்தில்
பின்செல்லும் மரங்கள்
மரங்கள்
புழுக்கள்
மனிதர்கள்
கட்டடங்கள்
பயணத்தில் பின் சென்று
மறைந்துபோகும்.
நீ நான்
பொக்கிஷமொன்றை
வட்டிக்கு தந்துவிட்டு
கொல்லைபுற கதவில்லா ,ஒரு வீட்டின்
முன்வாசலில் காத்திருக்கிறது
மரணம்
உள்ளே பதுங்குகிறான் ஊதாரி!
காற்றானவள்
வெறுமை நிறைந்த என் இதயத்தில்
நீ நிறைந்தாய்,
வெற்றிடத்தை நிரப்பும்
காற்றைப்போல்
சுவாசமே , நீயின்றி; நான் ஏது?