வாசலில் காயவைத்த நெல்லை
கொத்தி தின்னுகிரதொரு பெட்டை கோழி,
என் மீதமான நாட்களை
கொத்தி தின்னும்
உன் நினைவுகள் போல!
Monday, 30 July 2012
Friday, 20 July 2012
Wednesday, 18 July 2012
வாடிய பூக்களை
சூடியிருக்கிறாயா நீ???
என் காதலை தூக்கி
குப்பை தொட்டியில் போடு!!!!!
இன்னொருவன் காதலியாக
தன்னை அடையாள படுத்தி கொண்டவள் தானே நீ!!!!
எனக்கும் இன்னொரு காதல் வரக்கூடாதா????
அவமான சொற்க்களால்
குத்தி கிழித்து குற்றுயிரும் குலையுயிருமாய்
வீசி சென்றாய் என்னை!!!!
இப்போதோ,
என்னை பார்க்கையில்
உன் இமைகள் படபடக்கிறதே, ஏன்???
உன் உடல் மொழிகள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது , ஏன்????
நான் வாழ உன் நினைவுகள் மட்டுமே போதுமானது,
நீ தேவையேயில்லை!!!!
ஆனாலும் உன்னை நேசிக்கிறேன்!!!
உன் அழகிலோ ,
ஆசை வார்த்தைகளிலொ,
மயங்குவேன் என நினைக்காதே!!!
உணர்ந்து உருகும் ஒரு துளி கண்ணீரின் மதிப்பு,
என் முதல் காதலின்
முதல் முத்தம்!!!!
அதுவரை விலகி போ!!!
நானும் மெளனமாக காத்திருப்பேன்!!!
காதலோடு!!!
Tuesday, 10 July 2012
நெறய சாப்டாத்தான் சீக்க்ரமா பெரிய பொண்ணாவ,
ஸ்கூலுக்கெல்லா போலா"
சொல்லி
தன் பிஞ்சு விரல்களால்
சோற்றை என் மூஞ்சி முழுதும் தேய்க்கிறாள்.
ம்ம்ம்ம்ம் என்று முரண்டு பிடிக்க,
கண்களை அகல விரித்து ,
நாக்கை நீட்டி
பூச்சாண்டியிடம் என்னை கொடுப்பதாக சொல்கிறாள்!
நான் அழ துவங்கவே,
சும்மானாச்சிக்கும் சொன்னேன் சொல்லி
நெற்றி முத்தம் தருகிறாள்!!!!!
பிறக்கட்டும் எனக்கு ஒரு அன்னபூரணி!