வாடிய பூக்களை
சூடியிருக்கிறாயா நீ???
என் காதலை தூக்கி
குப்பை தொட்டியில் போடு!!!!!
இன்னொருவன் காதலியாக
தன்னை அடையாள படுத்தி கொண்டவள் தானே நீ!!!!
எனக்கும் இன்னொரு காதல் வரக்கூடாதா????
அவமான சொற்க்களால்
குத்தி கிழித்து குற்றுயிரும் குலையுயிருமாய்
வீசி சென்றாய் என்னை!!!!
இப்போதோ,
என்னை பார்க்கையில்
உன் இமைகள் படபடக்கிறதே, ஏன்???
உன் உடல் மொழிகள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது , ஏன்????
நான் வாழ உன் நினைவுகள் மட்டுமே போதுமானது,
நீ தேவையேயில்லை!!!!
ஆனாலும் உன்னை நேசிக்கிறேன்!!!
உன் அழகிலோ ,
ஆசை வார்த்தைகளிலொ,
மயங்குவேன் என நினைக்காதே!!!
உணர்ந்து உருகும் ஒரு துளி கண்ணீரின் மதிப்பு,
என் முதல் காதலின்
முதல் முத்தம்!!!!
அதுவரை விலகி போ!!!
நானும் மெளனமாக காத்திருப்பேன்!!!
காதலோடு!!!
Wednesday, 18 July 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment