ஒற்றைக்கால்
தவம் செய்யும்
என்னிடம்
என்ன வரம்
வேண்டுமென்று கேட்க்கும்
தேவதையே;
"என்னை தேடி
நீ வந்தது போதாதா"!!!!!
Tuesday, 29 November 2011
வரம்!
Thursday, 24 November 2011
தோழியா?காதலியா?
சொர்க்கமும், நரகமும்
பிரிந்து செல்லும்
சாலையோர பூங்கா ஒன்றில்
உனை சந்தித்தேன்,
நீ பூமிக்கு தள்ளிவிட்டாய்!
Monday, 14 November 2011
அலைபாயுதே!
என் இரவுகளை
திருடிய கொள்ளைக்காரி;
என் முகத்தையும்
கடத்தி சென்றாய்!
என் தனிமை காற்றில்
பிச்சி பூ வாசம் நிறைத்த மோகினி
உன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்;
பெளர்ணமிக்கு காத்திருக்கும்
கடல் போல!
அலைபாயுதே!
என் இரவுகளை
திருடிய கொள்ளைக்காரி;
என் முகத்தையும்
கடத்தி சென்றாய்!
என் தனிமை காற்றில்
பிச்சி பூ வாசம் நிறைத்த மோகினி
உன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்;
பெளர்ணமிக்கு காத்திருக்கும்
கடல் போல!
Friday, 11 November 2011
உள்ளூர் திருடி....உலகத்திருடி !
காலைல, நேரத்துல
வீட்டுக்கு வந்து,
கிச்சன்ல அம்மாக்கு
ஹெல்ப் பண்ணி....
சாமியெல்லாம் கும்பிட்டு
எனக்கு
திருநீர் வச்சி விடும்போதே, நெனச்சேன்!
"வேணாம் குட்டி, வெளயாடாதே!
"என் சட்ட பாக்கெட்ல வச்சிருந்த
30 ரூபாயும் ,பேனாவும்,
எங்கடி எரும?"
Friday, 4 November 2011
நீ
நீ……
காதல் பொய் காற்றில்
என்னை மிதக்கவிட்ட
சூனியக்காரி;
வலிகள் தந்து,
வாழ்க்கை தெரிவித்த
தேவதை;
அழகழகாய்
பூக்கள் பூக்கும்
அரளிச்செடி!
Thursday, 3 November 2011
ஆண் மனசு!
என்னை பற்றின
எல்லா உண்மைகளையும்,
சந்தேகித்தவள் நீ!
நீ சொன்ன பொய்களையெல்லாம்
நம்பி தொலைந்தவன் நான்!
பொய் சொன்னாய், கோபப்பட்டாய்,
வார்த்தை கொட்டினாய்,
விலகி சென்றாய்!
விட்டு சென்றதில் வலி உண்டுதான் பெண்ணே;
அதை விட,
தனியாக செல்கிறாயே
என்றுதான்
கவலைப்படுகிறேன்!