சாலையோரம் கிடக்கும், குடிகாரன் நான்;
காதல் என் கோப்பை,
அவள் என் மது;
இன்னும் ஊற்றுவேன்.........
இன்னும் குடிப்பேன்!
Thursday, 29 September 2011
Tuesday, 27 September 2011
Monday, 19 September 2011
*பயணம் சேரும் இடம் *
பிச்சி பூ சூடிய
ஈர கூந்தலை முகர்ந்து
உன் பின் கழுத்தில் முத்தமிட்ட,
நாள் போல இருக்கட்டும் ……… என் கடைசி நாள்!
Friday, 16 September 2011
Wednesday, 14 September 2011
#பொம்மல சேச்சியின் தற்க்கொலை#
என் முகம் வாடின போதெல்லாம்,
தலை கோதி,
நெற்றி முத்தமிட்டு,
மிட்டாய் தருவாயே, அக்கா;
இன்றும் நான் வாடித்தான் இருக்கிறேன்;
நீ எங்கே?
பத்ர காளி
விஜய் பிடிக்குமா,
அஜித் பிடிக்குமா
என கேட்டதற்க்கு
த்ரிஷா பிடிக்குமென்று சொல்லி விட்டேன்; பத்ர காளி! த்ரிஷா அவள் தோழியாக மட்டும் இருந்திருந்தால் , சோற்றில் விஷம் வைத்திருப்பாள்!
சர்வாதிகாரி
மூன்றாம் உலகப்போர் வந்தால், அது
பெண்களால் தான்!
நான் காந்தீய வழியில் ஒரு முத்தம் கேட்டால்,
அவள் சர்வாதிகாரியாய்
"ஒத விழும்" என்கிறாள்!
Tuesday, 13 September 2011
Monday, 12 September 2011
*ஒரு ரகசியம்*
அவள் தினமும் கடந்து செல்லும்
அந்த குல்மொஹார் மரத்தின் வேர்களில்தான்
ஒளித்து வைத்திருக்கிறேன்.....
என் காதலை!
Thursday, 8 September 2011
*முதல் சந்திப்பில்*
ஊதா பூக்கள் பூத்த,
கருநீல புடவை பெண்ணே,
இதோ பார்,
இங்கே ஒரு....,
வண்ணத்து பூச்சி!
Tuesday, 6 September 2011
கனவு
உன் மெளனங்கள்……… இரவு ;
என் கவிதைகள்.……… பகல் ; இரண்டும் சந்திக்க வழியே இல்லை!
விடிகாலையில் ஒரு கனா கண்டேன் ……,
உனக்கான ஒரு முத்தம்!
விடிகாலை கனா பலிக்குமாமே!