Saturday 2 January 2016

குறையொன்றுமில்லை காதலே

குன்றிமணியும்
மின்மினி பூச்சிகளும்
பெரும் அதிசயமாய் இருக்கும்
உலகத்தில் வாழ்கிறோம்
நீ உன் பிரார்த்தனைகளையெல்லாம் எனக்கானதாக்கினாய்
நான் என் முத்தங்களையெல்லாம் உனக்கானதாக்கினேன்
அந்தியில் கைகோர்த்து நடக்கலாம்
அலைகள் காலுரச கடற்கரையில் விளையாடலாம்
பிடித்த பாடலை முணுமுணுக்கலாம்
"போடா, போடி" விளித்து பொய் சண்டையிடலாம்
ஒருதுளி தேன் குடிக்கலாம்
ஒரு கவளம் சோற்றில் பசியாறலாம்
மழையில் நனையலாம்
மழைச்சத்தம் கேட்கலாம்
பெளர்ணமி இரவில் நிலா பார்த்து
கட்டிப்பிடிக்கலாம்
கன்னம் கிள்ளலாம்
கவிதை சொல்லலாம்
சண்டையிட்டு பேசாதிருக்கலாம்
சமதானமாகி விடிய விடிய பேசலாம்
தோள் சாயலாம்
மடியில் கிடக்கலாம்
புல்லட்டில் சிறு பயணம் போகலாம்
கலவிகொள்ளும் இணை தும்பிகள் போல
உறக்கத்திலிருக்கும் சிறு குழந்தை போல
தூரத்தில் வெள்ளைக்கோடாய் தெரியும் ஒரு மலையருவியை போல

இங்கே நாமும்  நம் காதலில்
மகிழ்ச்சியாய் வாழலாம் கோணவாச்சீ
வேறென்ன வேண்டும்!

No comments:

Post a Comment