Monday 19 May 2014

பட்டுபூச்சியும் பாட்டு பூச்சியும்


எனக்கு ,எல்லாமே நீதான் பெண்ணே,
இந்த குளிர்கால இரவில்
கணப்பருகே அமர்ந்திருக்கையில் 
வெளியே மூடியிருக்கும் பனி  நீ
அறையை நிறைத்திருக்கும் குளிர் நீ
என்னை அணைத்து கிடக்கும் வெப்பம் நீ 
சித்திரை மாத கொன்றை மரம் போல
கோடை கால வாகை மரம் போல
உன்னை பற்றிய கவிதை நிறைத்திருக்கும்
பூமரம் நான்
ஒற்றை இழையிலேயே
தன் கூட்டை கட்டிக்கொள்ளும்
பட்டுப்பூச்சி போல
உன்னை மட்டுமே பாடித்திரியும்
"பாட்டுபூச்சி" நான்.








photo: breeju rajagopal

No comments:

Post a Comment