நீண்ட நாட்கள் கழித்து ,
நீயும் நானும்
எதிர்பாராமல் சந்தித்தோம்,
கண்டும் காணதது போல்
கடந்து சென்றாய்,
திரும்பி பார்த்தேன்,
உன் காதலின்
காலடி சுவடுகள்
ஓடி வந்தெனை
கட்டிக்கொண்டது!!!
உனக்கு பிடிக்காத,
என் சின்ன சின்ன தவறுகளை
பொத்தி பொத்தி வைக்கிறேன்,
உன் சிணுங்கல்களும்
அக்கறையும்,
செல்ல சண்டைகளும்,
அவ்ளவு அழகு!