Wednesday, 31 August 2011

பேய் படம் பாக்க மாட்டா,ரத்தம் பாத்தா தல சுத்தும்பா, ஐயோ, எறும்பெ கொல்லாதே ம்பா, ரொம்ப பாவம் அவ,
ரொம்ப எளகின மனசு!
சிக்கன் லாலிபப் மட்டும் மூணு பிளேட் சாப்பிடுவா,
அவளுக்கு ரொம்ப எளகின மனசு!

அவன்,அவள்

"நான் யார்?
லூஸு,
பைத்தியம்,
சொன்ன பேச்சை கேக்க மாட்டியா?,
ஒத உழும்,
கொன்னுருவேன்,
செல்லம்,
புஜ்ஜு,
monkey,
நேரத்துக்கு வர மாட்டியா?
உம்ம்ம்ம்மா,
சோம்பேறி;
அவள் யார்?
அவ யாரோ!
எனக்கு தெரியாது, சாமி!

எட்டி குதித்தது, நினைவு தவளை;
சிலிர்த்து செத்தது………
இதய குளம்.

பனி புல்லில்
நடந்து செல்கிறாள்,
இதயம் முழுதும்...... காலடித்தடங்கள்!

இந்த உலகின்,
மிக அழகான நடனக்காரி.......
உன் ஜிமிக்கி!

Tuesday, 30 August 2011

உன்னை பார்த்ததும்..... பாட தொடங்குகிறேன்;
பிரகாசமாகும்.... முகம்; படபடக்கும்..... இதயம்;
உன் குறும்செய்தி கிட்டிய,என் கைபேசி போல,நானும்!

Monday, 29 August 2011

sms தோழி

மழை நனைத்த ஜன்னல் கண்ணாடியில்,
உன் முகம் வரைந்து பார்க்கிறேன்......... மீண்டும் ஒரு சாரல் ஜன்னல் நிறைக்கிறது,
மழை போலவே இருக்கட்டும், உன் முகம்.

பட்டாம் பூச்சிக்கு,
அட்டை பூச்சியின் குணம் இருக்குமானால்,
உன் பெயர் வைக்கலாம்!

க(ண்ணன்)ாதல் டிபார்ட்மென்ட் ஸ்டோர்

கிள்ளி வைக்கிறாள், செல்லமாய் குட்டுகிறாள், வெட்க அலைகளால் என்னை மூழ்கடிக்கிறாள்,
ஒரு முத்தம் வாங்கினால், பத்து வெட்கம் "free"