காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Friday, 28 January 2011
எச்சில் இலை சோற்று பருக்கைகளாய்
உன் நினைவுகள் .
பசித்து களைத்த நொண்டி சொறிநாய்
நான்.
பேனாவும் மையும் ,
காகிதமும் நேரமும் ,
நினைவுகளும் வார்த்தைகளும்
நிறைய இருக்கின்றனதான் ,
இருந்தும் எழுவதில்லை .
வரிகள் உணர்த்துமா ......வலிகளை????
மறுக்க முடியும் ,
மறைக்க முடியும் ,
மறக்க முடியுமா ????????
வேலை கிடைக்காதவனின்
பகல் போல ,
நகர மறுக்கும் பேருந்து .
உன் விடுமுறை நாட்களில் .
Monday, 3 January 2011
வார்த்தை ....மெல்லினம்
மௌனம் ......வல்லினம்
பெண்ணே, நீ
கொல்லினம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)