Friday, 24 July 2015

தொடாமலே

டீ , கொஞ்சம் சேர்ந்து உட்காரு

அய்யயோ,யாராவது பாத்துருவாங்க!

இன்னிக்கு என்ன ஸ்பெஷல் கலக்கலா வந்திருக்கே, ஒரு முத்தம் குடேன்

போ ஏட்டா ,உனக்கு வேற வேலையே இல்ல!

பொந்நே , என்னமோ தெரில இன்னிக்கு உன்ன hug பண்ணணும் போல இருக்கு

ம்ம், எனக்கு உன்ன ஒதைக்கனும் போலிருக்கே!

ச்சே, எவ்ளோ பூ! நல்ல காத்து……… உன் தோள்ல கை போட்டு அப்பிடியே நடந்தே வீட்டுக்கு போலாம் , நல்லாருக்கும் ல?

போடா எருமெ!
-
-
-
-
ஏட்டா………

என்னடி?

ஏட்டா……………?

சொல்லுடி

நமக்கு பொறக்குற பைய்யனுக்கு என்ன பேர் வைக்கலாம், சொல்லு?

ம்ம் …………வானத்திலிருந்து குதிச்சவன்னு வைய்யீ.

போடா பன்னி நாயே போத்தே கழுதே எருமே……………

பெரு நகரம்

தேநீர் கோப்பைகள்
சமோஸக்கள்
ப்ரியமான புன்னகைகள்
காதலான பார்வைகள்
சிறு குறும்புகள்
செல்ல தீண்டல்கள்
அர்த்தமற்ற உரையாடல்கள்
பூ மோதிரம்
உனக்கே உனக்கான வளையல்
எனக்காக வைத்து வரும் சந்தன கீற்று
அளந்து வைத்த சிரிப்பு
அளவு மறந்து சிரிக்கையில் எடுக்கும் புகைப்படம்
அதை அழிக்க சொல்லி கெஞ்சும் சிணுங்கல்

நீயில்லாத  கணங்களை
கடலை கடக்கும் ஒற்றை பறவைபோல தனிமை மிதந்து கடக்கிறேன்
நீயில்லா இந்நகரம்
நச்சு புகையால் மூச்சை திணரடிக்குது தோழி

எப்போது வருவாய் கோணவாச்சி?
காதலுடன் காத்திருக்கும்

                    -உன் பொறுக்கி பைய்யன்