Showing posts with label வானம் தவம் தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label வானம் தவம் தமிழ் கவிதை. Show all posts

Wednesday, 7 November 2012

*நட்சத்திர காடு*


தனிமை இரவில்
மொட்டை பாறை நிறைக்கும்
சில்வண்டின்
ரீங்காரம் !
நம் நீண்ட தூர
இடைவெளியை
பெருமூச்சு நிரப்பும்,
மெளனமாய்
ஒரு கவிதை
உடைந்து சிதறும்!
கார்மேகம் கடக்க
நிலவொளி
மழை பொழியும்!
தவளை பாடும்!
நானும் பாடுவேன்!
ஒற்றை பனை மரத்தில்
பிய்ந்து தொங்கும் பனையோலை
காற்றில் ஆடும்
"சர,சர,சர"!
கள்ளிப்பூ
பூக்கும் காலம்
வந்தபாடில்லை!
ஒற்றை பனைக்கு ;
நிலா  துணை  .......
எனக்கு ,வானம்!