Showing posts with label வலி காதல் கவிதை தமிழ் நிராகரிப்பு. Show all posts
Showing posts with label வலி காதல் கவிதை தமிழ் நிராகரிப்பு. Show all posts

Saturday, 29 December 2012

வெறும் பொம்மை

பொம்மை கடையில்,
வரிசையாய் அடுக்கிய
பொம்மைகளுக்கிடையே,
பத்தோடு பதினொன்றாய் இருந்திருக்கலாம்!
சிவப்பு
மஞ்சள்
நீலம்
பச்சை,
என்னை தேர்ந்தெடுத்தாயே,
ஸ்பரிசங்களில் உயிர் தந்தாயே,

உயிரற்ற பொம்மையாகவே இருந்திருக்கலாம்!
நேசித்த பின் தானே தெரிகிறது
நிராகரிப்பின் வலி!