Showing posts with label மாலகோவில் மாதேஸ்வரன் காதல் கவிதை தமிழ் பிரிவு திருவிழா. Show all posts
Showing posts with label மாலகோவில் மாதேஸ்வரன் காதல் கவிதை தமிழ் பிரிவு திருவிழா. Show all posts

Wednesday, 12 December 2012

மாலகோவில்

பலூண்களின் வண்ணமும் வடிவமும்
கவர்ந்திழுக்க,
ராட்டின சவாரி வேடிக்கை பார்த்து,
ஜவ்வுமிட்டாய் வாசனையில்
எச்சில் ஊறி,
இரண்டு ரூபாய் குச்சி ஐஸ் மட்டுமாகி,
தேம்பலில் கரைந்தபடி
சில,மாலகோவில் !

வண்ண வண்ண கனவுகளை
விரல்களில் கட்டி,
காதல் ராட்டினத்தில்
ஏற்றி,இறக்கி,
ஜவ்வு மிட்டாய் நினைவுகளை
கை நிறைத்து,
புன்னகை பரிசளித்து கடக்கிறாள் என்னவள்; ஒரு மகிழ்ச்சியான மாலகோவில்!

கடைசிபெட்டிக்கு "டாட்டா"காட்டும்
சிறுவனின் சடுதியில்,
முடிந்தளவு முத்தம் கொட்டி
விடைகொடுக்கிறேன்,
இயல்பை நொந்தபடி!

இன்னொரு ரயில் வரும்,
இன்னொரு திருவிழாவும்!

விழாவற்ற நாட்களில் ,
தனிமை காயும்,
மனமென்னும் மாலகோவில்; மாதேஸ்வரன் துணை!