Showing posts with label பொங்கல் தைப்பொங்கல் மாட்டு பொங்கல் காணும் பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல் தைப்பொங்கல் மாட்டு பொங்கல் காணும் பொங்கல். Show all posts

Monday, 14 January 2013

பொங்கலோ பொங்கல்

என் சின்ன சின்ன சில்மிஷங்களில்
சிலிர்த்தெழுவாள்,
அது பால் பொங்கல். 

ஆச்சரியபடுத்தும் பரிசுகளில்
முகம் மலர்ந்து சிரிப்பாள்
அது வெண்பொங்கல்.

பிற பெண்களிடம்
நான் ,சிரித்து பேசுகையில்
அவளிடம் பொங்குமே ஒரு பொறாமை ,அதுதான்
எனக்கு சக்கரை பொங்கல்.

"எரும மாடு" என்றபடி அவள் கொண்டாடும்
மாட்டு பொங்கல்
ரகசியம்!
எனக்கு மட்டுமானது,
உங்களிடம் சொல்வதற்கில்லை!

மூஞ்சி திருப்பி
முகம் சுருக்கி
முரண்டு பிடித்து
அப்பப்பா…………
நான்கு நாளுக்கொருமுறை
நான் "காணும் பொங்கல்".

சுள்ளென்ற சூரியனாய்,
சில்லென்ற நிலவொளியாய் ,
என்னோடு அவளிருக்கும்
நாளெல்லாம்

"பொங்கலோ பொங்கல்"!