Wednesday, 23 September 2015

புருசன்காரனும் பொண்டாட்டிகாரியும்

அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.

ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?

உன் புருசன்

சொல்லவேல்லா,இதெப்பொருந்து?

அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ?  என்று கேட்ட போது

கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று

அன்றிலிருந்து

புருசன்காரனும் பொண்டாட்டிகாரியும்

அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.

ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?

உன் புருசன்

சொல்லவேல்லா,இதெப்பொருந்து?

அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ?  என்று கேட்ட போது

கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று

அன்றிலிருந்து

என்னவள்

நான் உன்னில் மயங்கி கிடக்கிறேனடி தோழி என்றேன்
மார்போடு சேர்ந்தபடி
"தெரியும்" என்றாள்
"நானும் , நானும்" என்று கத்தவும் முணுமுணுக்கவும் தொடங்கியது
மல்லிகை பூவும்
கொலுசும்
ஸ்டிக்கர் பொட்டும்
ஜிமிக்கியும்
மோதிரமும்
வளையலும்

நல்லவேளை அவளுக்கு கேட்கவில்லை

இந்த உலகில் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும்
ஒற்றை ஜீவன் நான் மட்டுமேயென
நினைத்து மொத்த காதலையும்
என்னில் பொழிகிறாள்

சின்ன சின்னதாய் சில உதவிகள்

கடவுளேய்………எனக்கூன்னு வந்து வாச்சிருக்கே ஒண்ணு

சொல்லூ,
எனக்காக எப்பாவது, எதாவது செஞ்சிருக்கியா?
உலக மகா சோம்பேறி!
*****
"அடியேய், அன்னிக்கு சேலை உடுத்தைல ……………
*****
ஐய்யாயொஓ……… போதும் போதும்

இதுவரை தாங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி
நீங்க உங்க வேலைய பாருங்க சார்

****

லீவு நாட்கள்

"நாளைக்கு நான் ஊருக்கு போக போறேன், ஒரு மாசம் முடிஞ்சுதான் வருவேன்"

சரி போயிட்டு வா takecare

உனக்கு வருத்தமாயில்லையா?

இப்ப இல்ல நீ போயிட்ட ஒரு ரெண்டு நாள் ஃபீல் பண்ணுவேன்  அப்புறம் மறந்துடுவேன்

என்னது மறந்துடுவியா? போடா உங்கூட டூ

அப்பொ மறக்காமிருக்க ஏதாவது குடித்திட்டு போ

ஏதாவதுனா என்னது?

ஏதாவதுன்னா ……ஏ……தாவது

ஓஹ்……… சரி கண்ணமூடு

-
-
-
-
அவள் கிள்ளி வைத்த இடத்திலொரு பூ பூத்தது
-
-
-
போதுமா , இனி மறக்கமாட்டியே?

அடியே எருமெ அதுக்கு  இப்பிடயா  !ஆஹ்.

"ஹ ஹ ஹா"

இருடீ,உன்ன்ன்ன்ன்ன்னே
-
-
-
அவளுக்கு வலிக்காமல்
வெட்கத்தில் சிவக்க வைத்த
பூந்தோட்டம் ஒன்றை பரிசளித்தேன்
-
-
-
பிரியும் பாதையில்
கண்களால் கட்டிப்பிடித்தாள்
கண்கலங்கி விலகிப்போனாள்.

miss u டி கோணவாச்சீ

காதல் பெருமழை

முதல் துளி பட்டதும்
உயிர் சிலிர்க்கும்
ஒரு புல்லின் வேராய்
எல்லா மழையிலும்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்

ஒரு மழையென்பது
கோடி கோடி துளிகளாலானது
இருவரும் பங்கிடும் முத்தங்களால்
நம் காதலும் ஒரு பெருமழை போல் தானே கோணவாச்சீ

நீ கொட்டி தரும் முத்த துளிகளில்
முழுக்க நனைகிறேன்
ஒரு மலை முகட்டை போல

பொங்கி வழிந்து அடித்து நுரைத்து
என்னையே அடித்து செல்கிறது
என்னுள் எழும் ஒரு காட்டாறு
உன் காதலெனும் காட்டாறு

என்னவள்

நான் உன்னில் மயங்கி கிடக்கிறேனடி தோழி என்றேன்
மார்போடு சேர்ந்தபடி
"தெரியும்" என்றாள்
"நானும் , நானும்" என்று கத்தவும் முணுமுணுக்கவும் தொடங்கியது
மல்லிகை பூவும்
கொலுசும்
ஸ்டிக்கர் பொட்டும்
ஜிமிக்கியும்
மோதிரமும்
வளையலும்

நல்லவேளை அவளுக்கு கேட்கவில்லை

இந்த உலகில் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும்
ஒற்றை ஜீவன் நான் மட்டுமேயென
நினைத்து மொத்த காதலையும்
என்னில் பொழிகிறாள்