Monday, 28 May 2012

#மீதமிருக்கும் நாட்கள்#



என் வாழ்வின் மிக சிறந்த கணங்கள்.....
உன்னோடு பழகிய நாட்கள்,
மறக்க முயல்கிறேன்!
மிக வேண்ட்ப்பட்டவளாகவும்,
தேவையற்றவளாகவும்
உருமாறி திரிகிறாய்...நீ.
வசந்தகாலத்து பூந்தோட்டத்தில் மரித்து கிடக்கும் பட்டாம்பூச்சி.,
என் காதல்!
மீதமிருக்கும் என் நாட்கள் யாருக்கானவை?
வரமோ சாபமோ,
உன் நினைவுகளெனும்
மாயையில் வாழ்கிறேன்;
சர்க்கரை பரணியில்
சிக்கிக்கொண்ட
ஒரு எறும்பை போல!


Thursday, 3 May 2012

சவத்தின் மீது வீசிய பூக்கள்,
சாலையெங்கும் நசுங்கி கிடக்கும்!
வாகனங்களின் சக்கரம் போலவேதான்
உன் ஏளனப்பார்வையும்!

Wednesday, 2 May 2012

குடியிருந்த கோவில்.


நீ காலி செய்துபோன வீட்டைப்பார்த்து
காதல் வளர்க்கிறேன்,
கோபுரம் பார்த்து
இறைவனை நினைக்கும்
பக்தன் போல!


Sunday, 15 April 2012

அவள் அழகு
எப்படிப்பட்டது தெரியுமா??? 
முதல் முதலாய்
ரயிலையும்.,
நீர்வீழ்ச்சியை யும்
ஒன்றாக பார்த்த
சிறுவனாக என்னை ஆக்கி விட்டது!!!!


Sunday, 1 April 2012

*முப்பது நாட்க்களில் கவிஞனாக 3 எளிய வழிகள்*


அவள்,ஒரு கவிதைக்கு ஒரு முத்தம் தருவதாக ஒப்பு கொண்ட பின்;
என் முதல் கவிதை!
" பாவடை காலத்து பட்டாம் பூச்சி,
நீ தாவணி போடைல தட்டாம் பூச்சி ,
இப்பொ சேலை கட்டி என்னை தின்னுற அழகு சுந்தரி……………
நீ பொண்ணேயில்ல... புலி! 
இரண்டு குட்டும்,
  நான்கு முத்தமும் கிடைத்தது,
நானும் கவிஞன் ஆகி விட்டேன்! 


Tuesday, 27 March 2012

காதல் வங்கி!

புன்னகையை கடன் தரும்,
வட்டி கேட்கும் கண்ணீராக,
காலம் முழுதும் தீராது, கடன் தொல்லை,
ஜப்தி செய்யும் என் உயிரை ; உன் காதல் வங்கி!

Tuesday, 29 November 2011

வரம்!


ஒற்றைக்கால்
தவம் செய்யும்
என்னிடம்
என்ன வரம்
வேண்டுமென்று கேட்க்கும்
தேவதையே;
"என்னை தேடி
நீ வந்தது போதாதா"!!!!!