Wednesday, 23 September 2015

லீவு நாட்கள்

"நாளைக்கு நான் ஊருக்கு போக போறேன், ஒரு மாசம் முடிஞ்சுதான் வருவேன்"

சரி போயிட்டு வா takecare

உனக்கு வருத்தமாயில்லையா?

இப்ப இல்ல நீ போயிட்ட ஒரு ரெண்டு நாள் ஃபீல் பண்ணுவேன்  அப்புறம் மறந்துடுவேன்

என்னது மறந்துடுவியா? போடா உங்கூட டூ

அப்பொ மறக்காமிருக்க ஏதாவது குடித்திட்டு போ

ஏதாவதுனா என்னது?

ஏதாவதுன்னா ……ஏ……தாவது

ஓஹ்……… சரி கண்ணமூடு

-
-
-
-
அவள் கிள்ளி வைத்த இடத்திலொரு பூ பூத்தது
-
-
-
போதுமா , இனி மறக்கமாட்டியே?

அடியே எருமெ அதுக்கு  இப்பிடயா  !ஆஹ்.

"ஹ ஹ ஹா"

இருடீ,உன்ன்ன்ன்ன்ன்னே
-
-
-
அவளுக்கு வலிக்காமல்
வெட்கத்தில் சிவக்க வைத்த
பூந்தோட்டம் ஒன்றை பரிசளித்தேன்
-
-
-
பிரியும் பாதையில்
கண்களால் கட்டிப்பிடித்தாள்
கண்கலங்கி விலகிப்போனாள்.

miss u டி கோணவாச்சீ

கண்ணுள்ள காதல்

எத்தனை நெரிசலிலும்
கூவும் ஒரு குயில்
எங்கேனும் பூத்திருக்கும் ஒரு மலர்
கேட்கவும் காணவும்
காதல் வேண்டும்
குயில்களும் பூக்களுமில்லா
இடமென்றால்
கண்கள் மூடி உன்னை நினைப்பேன் கோணவாச்சீ
ஐயோ , அந்த கணமெனை ஆனந்தத்தில் கொல்லும்
அழகீ உன் கேலி சிரிப்பு

காதல் பெருமழை

முதல் துளி பட்டதும்
உயிர் சிலிர்க்கும்
ஒரு புல்லின் வேராய்
எல்லா மழையிலும்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்

ஒரு மழையென்பது
கோடி கோடி துளிகளாலானது
இருவரும் பங்கிடும் முத்தங்களால்
நம் காதலும் ஒரு பெருமழை போல் தானே கோணவாச்சீ

நீ கொட்டி தரும் முத்த துளிகளில்
முழுக்க நனைகிறேன்
ஒரு மலை முகட்டை போல

பொங்கி வழிந்து அடித்து நுரைத்து
என்னையே அடித்து செல்கிறது
என்னுள் எழும் ஒரு காட்டாறு
உன் காதலெனும் காட்டாறு

ஏதேதோ

கிளையில் அமர்ந்திருக்கும் ஒற்றை காகம்
கள்ளிச்செடியின் நிழல்
அசைபோட்டு படுத்திருக்கும் பசு
செடிகளையும் இலைகளையும் சுற்றிவந்து
பூக்கள் தேடும் பட்டாம்பூச்சி
காற்றில் அலைகழிந்து படபடக்கும் அதன் மென் சிறகுகள்
மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் ரெட்டைவால் குருவி
-
-
-
-
-
-
-
ஏதேதோ எழுதி தனிமை கடக்கிறேன்  நான்

நீ என்ன செய்துகொண்டிறாய் கோணவாச்சீ?

கைவிடுத்து டாட்டா காட்டும் தாயை
கேவிக்கேவி அழுதபடி திரும்ப திரும்ப பார்த்து
கையசைத்து பள்ளிசெல்லும்
சிறு குழந்தை போல
நாம் கைகோர்த்து நடந்த நாட்களை 
மனதால் கடந்து வருகிறேன்
கோணவாச்சி-
-
-
-
-

தாயின் கையை உதறிவிட்டு
விளையாட ஓடும் சிறு பிள்ளை போல
இன்றைய நாளை விட்டு
உன் கரம் பற்றும் நாளெண்ணி
குதியாய் குதித்தோடுது
இந்த மனம் கோணவாச்சீ

Friday, 24 July 2015

தொடாமலே

டீ , கொஞ்சம் சேர்ந்து உட்காரு

அய்யயோ,யாராவது பாத்துருவாங்க!

இன்னிக்கு என்ன ஸ்பெஷல் கலக்கலா வந்திருக்கே, ஒரு முத்தம் குடேன்

போ ஏட்டா ,உனக்கு வேற வேலையே இல்ல!

பொந்நே , என்னமோ தெரில இன்னிக்கு உன்ன hug பண்ணணும் போல இருக்கு

ம்ம், எனக்கு உன்ன ஒதைக்கனும் போலிருக்கே!

ச்சே, எவ்ளோ பூ! நல்ல காத்து……… உன் தோள்ல கை போட்டு அப்பிடியே நடந்தே வீட்டுக்கு போலாம் , நல்லாருக்கும் ல?

போடா எருமெ!
-
-
-
-
ஏட்டா………

என்னடி?

ஏட்டா……………?

சொல்லுடி

நமக்கு பொறக்குற பைய்யனுக்கு என்ன பேர் வைக்கலாம், சொல்லு?

ம்ம் …………வானத்திலிருந்து குதிச்சவன்னு வைய்யீ.

போடா பன்னி நாயே போத்தே கழுதே எருமே……………

பெரு நகரம்

தேநீர் கோப்பைகள்
சமோஸக்கள்
ப்ரியமான புன்னகைகள்
காதலான பார்வைகள்
சிறு குறும்புகள்
செல்ல தீண்டல்கள்
அர்த்தமற்ற உரையாடல்கள்
பூ மோதிரம்
உனக்கே உனக்கான வளையல்
எனக்காக வைத்து வரும் சந்தன கீற்று
அளந்து வைத்த சிரிப்பு
அளவு மறந்து சிரிக்கையில் எடுக்கும் புகைப்படம்
அதை அழிக்க சொல்லி கெஞ்சும் சிணுங்கல்

நீயில்லாத  கணங்களை
கடலை கடக்கும் ஒற்றை பறவைபோல தனிமை மிதந்து கடக்கிறேன்
நீயில்லா இந்நகரம்
நச்சு புகையால் மூச்சை திணரடிக்குது தோழி

எப்போது வருவாய் கோணவாச்சி?
காதலுடன் காத்திருக்கும்

                    -உன் பொறுக்கி பைய்யன்