Friday, 24 May 2013

ஆசை


கடைசி ஆசை என்னவென்று கேட்டுவிட்டு
யாருக்கேனும்
வாழ்வை கொடுத்திருக்கிறீர்களா, என்ன?

தவறுகள் ,என் மீதே இருப்பினும், 
சண்டையிடுவேன்.
தேற்றுவதற்கு நீயிருப்பாய் என்பதால்
தேம்பி தேம்பி அழுவேன்!

போடா! பன்னிநாயே,
எருமே…… பிசாசு!

வெயில் …………பாவம்!
மன்னிப்பு வேண்டி ,
குடைபிடித்துவரும்
உன் காலடியில் கிடக்குது பார்!

*-*-*-*

மழை……………பாவம்! :(

குடைகொண்டு ,நீ நிராகரித்த மழை,
கலங்கி கிடக்கிறது
சாலை மொத்தம்!

குழந்தைகளின் கடலில்

நுழைந்துவிடும்
அலைகள்!
வெளியே நின்று வேடிக்கை பார்க்கும்
கடல்.

"ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்"!

ரெண்டு கொடம் தண்ணீ ஊத்தி ,
ரெண்டு பூ பூத்துச்சாம்"! 

கைகள் கோர்த்து
அன்பை பறிமாறிக்கொண்ட, அப்போதும்
பார்வையால் மட்டுமே
பேசிக்கடக்கும்
இப்போதும்

கோடி குடம் தண்ணி ஊத்தி
கோடி பூ பூத்த மலர்க்காடாய்
எங்கள் தெரு!

"உனக்கு வேற வேலையே இல்லியா"?





"குலை குலையா முந்திரிக்கா" காலம்தொட்டு
உன் பின்னால் சுற்றுவதை தவிற
வேறு வேலையில்லா
நரி நான்!

"புரிஞ்சுக்கடி ராசாத்தி"! <3<3<3

Friday, 17 May 2013

எனக்கு தெரியும் ,
வாழ்க்கை ஒரு பந்தையமல்ல;
நெடும்பயணம்.

தோளோடு தோள் நின்று
மகிழ்விக்கும் தோழன் போல ,
அன்பாய்
மேடு பள்ளங்களில்
பதறாமல் கூட வரும்
மனைவி போல
என் வழிப்பயணத்திற்க்கு
நம்பி எடுக்கிரேன்
என் புல்லட்டை! 
*****
எனக்கு தெரியும்
இந்த பாதை எனக்கனது மட்டுமல்ல,
உங்களுக்கானது ,
அவருக்கானது,
அவளுக்கானது,
தன் பாதையை
தானே போட்டு செல்லும்
ஒரு பட்டாம் பூச்சிக்குமானதென்று
என் புல்லட்
யாருக்கும் தொல்லை தராத
எல்லோருடைய பாதையிலும் செல்லும் .
******'*
350cc யின் அபரிதமான ஆற்றல்
100cc க்கு வழி தந்து
"டாட்டா"காட்டும். 

அகம்பாவத்தில்
அரைகூவல்விட்டுச்செல்லும் அவர்களுக்கு 
பெரும் பணிவு கொண்ட ,வாயுபுத்ரனை புரியாது 
*****
மழை வருவது
மயிலுக்கும் தவளைக்கும் தெரிவது போல
தூரத்தில் நான் வருவதும்
என் அன்பர்களுக்கு தெரியும்  .  

******
புல்லட்டை
தொடக்குவதும் இயக்குவதும்
ஒரு கலை,
ஒரு தியனம் !
இயக்கத்தில் ,
புல்லட்டின் சப்தத்தில் கரைந்து
காணாமல் போய்
பயணம் மட்டுமே மீதமிருப்பது
"ஜென்"!

*******

இளையராஜாவை பாடியபடி
குளிர்காற்று முத்தமிட
பிற வாகனங்களற்ற புறவழியில்
பெளர்ணமி  நிலா வெளிச்சத்தில்
பைக்கில் பயணத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் 

புல்லட்டில் பயணிப்பவர்கள்
வரம் பெற்றவர்கள்!

"டுப் , டுப் , டுப், டுப்"!